• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வாடகை வீட்டில் இருப்பது vs அதே பணத்தை ஹோம் லோனாக செலுத்தி வீட்டை வாங்குவது.. எது பெஸ்ட்..? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 23, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
வாடகை வீட்டில் இருப்பது vs அதே பணத்தை ஹோம் லோனாக செலுத்தி வீட்டை வாங்குவது.. எது பெஸ்ட்..? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 23, 2025 12:59 PM IST

நீங்கள் டெல்லி அல்லது மும்பை போன்ற மெட்ரோ நகரத்தில் வசிப்பதாகக் கருதும் போது, 2025ல் 2 அல்லது 3 BHK ஃபிளாட் வாங்குவதற்கு கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் செலவாகிறது.

News18News18
News18

ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்வது என்பது பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் கலாச்சாரப் பெருமையின் ஓர் அடையாளமாக இருக்கிறது. மாத வருமானம் பெறும் பல நபர்கள் வேலை காரணமாக பல்வேறு நகரங்களுக்கு இடம்பெயர வேண்டி இருப்பதால், ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது நல்லதா அல்லது வாங்குவது நல்லதா என்ற குழப்பத்தை அடிக்கடி எதிர்கொள்கின்றார்கள். அளவுக்கு அதிகமான பணத்தை எதற்காக வாடகை வீட்டிற்கு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பது நியாயமான ஒன்றுதான். இதனை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு, 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு வீட்டை 20 வருடங்களுக்கு வாடகைக்கு எடுக்கலாமா அல்லது EMI செலுத்தி வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாமா என்ற பொருளாதார மதிப்பீட்டை செய்யலாம்.

ஒரு வீட்டை வாங்குவது: 

நீங்கள் டெல்லி அல்லது மும்பை போன்ற மெட்ரோ நகரத்தில் வசிப்பதாகக் கருதும் போது, 2025ல் 2 அல்லது 3 BHK ஃபிளாட் வாங்குவதற்கு கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் செலவாகிறது. இது மாதிரியான வீடுகள் வாங்குவதற்கு நீங்கள் 20% தொகையை டவுன் பேமெண்ட்டாக செலுத்த வேண்டும். அதாவது 20 லட்சம் ரூபாய். மீதமிருக்கும் 80 லட்சம் ரூபாயை வீட்டுக் கடனாக வாங்கி, ஒவ்வொரு மாதமும் அதனை வட்டியோடு திருப்பிச் செலுத்த வேண்டும்.

20 வருடங்களுக்கு 8.5% என்ற சராசரி வீட்டுக் கடன் வட்டி விகிதத்தோடு மாதத் தவணை என்பது 69,426 ரூபாயாக இருக்கும். மொத்தமாக வீட்டை வாங்குவதற்கு நீங்கள் 86.6 லட்சம் ரூபாயை வட்டியாக மட்டுமே செலுத்துகிறீர்கள். மொத்தமாக 20 லட்சம் ரூபாய் டவுன் பேமெண்ட் + 80 லட்சம் ரூபாய் கடனுக்கான முதல் + 86.6 லட்சம் ரூபாய் வட்டி என்று கணக்கிடும்போது, இது தோராயமாக 1.86 கோடி ரூபாயாக இருக்கும். இப்போது இந்த விலை ஒரு வருடத்திற்கு 6% அதிகரிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். அப்படி என்றால், உங்களுடைய வீட்டின் மதிப்பு 20 வருடங்களில் 3.21 கோடி ரூபாயாக மாறும். அதாவது ஒரு வீட்டிற்கு நீங்கள் 1.86 கோடி செலவு செய்யும் போது 20 வருடங்கள் கழித்து உங்களுடைய கையில் 3.21 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும்.

வேலை நிமித்தமாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது: 

மெட்ரோபாலிட்டன் நகரத்தில் வாழும் நீங்கள் 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு வீட்டை மாதம் 40,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வருடமும் வீட்டு வாடகை 10% உயர்ந்ததாகக் கருதும் போது, அடுத்த 20 வருடங்களில் வாடகை 2.65 லட்சம் ரூபாயை விட அதிகமாகலாம். இதனால் 20 வருடங்களுக்கு வாடகை வீட்டிற்கு மட்டும் நீங்கள் 2.75 கோடி ரூபாயை கிட்டத்தட்ட செலவு செய்திருப்பீர்கள். அதே சமயத்தில் உங்களிடம் எந்த ஒரு சொத்தும் இருக்காது.

எது சிறந்த ஆப்ஷன்?

நீண்ட காலத்தைக் கருத்தில் கொள்ளும்போது, ஒரு வீட்டை வாங்குவது என்பது சிறந்த யோசனையாக இருக்கும். ஏனெனில் இறுதியில் உங்களுடைய கையில் ஒரு சொத்து சொந்தமாக இருக்கும். அதே காலகட்டத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கும் அதே செலவு ஆகும். எனினும் இது உங்களுடைய வருமானம், வாழ்க்கை முறை மற்றும் நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து அமையும்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 23, 2025 12:59 PM IST

Read More

Previous Post

புரோ கபடி லீக்கில் ‘ஷூட் அவுட்’ முறை! | Shoot Out in Pro Kabaddi League

Next Post

புத்ராஜெயா தேசிய தின கொண்டாட்டங்களில் அங்கீகரிக்கப்படாத ட்ரோன்கள் பயன்படுத்தத் தடை | Makkal Osai

Next Post
புத்ராஜெயா தேசிய தின கொண்டாட்டங்களில் அங்கீகரிக்கப்படாத ட்ரோன்கள் பயன்படுத்தத் தடை | Makkal Osai

புத்ராஜெயா தேசிய தின கொண்டாட்டங்களில் அங்கீகரிக்கப்படாத ட்ரோன்கள் பயன்படுத்தத் தடை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin