• Login
Monday, September 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வாக்கை காப்பாற்றாத பாகிஸ்தான்.. எல்லாத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்! அலர்ட் மோடில் சவுதி | Pakistan rushes damage control with Saudi Arabia after backtracking on Houthi defence commitment

GenevaTimes by GenevaTimes
September 14, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வாக்கை காப்பாற்றாத பாகிஸ்தான்.. எல்லாத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்! அலர்ட் மோடில் சவுதி | Pakistan rushes damage control with Saudi Arabia after backtracking on Houthi defence commitment
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Halley Karthik

Time
Published: Monday, September 14, 2026, 9:45 [IST]

இஸ்லாமாபாத்: சமீபத்தில்தான் சவுதி அரேபியா மற்றும் துருக்கியுடன், பாகிஸ்தான் மக்கா ஒப்பந்தத்தை போட்டிருந்தது. அதன்படி, இந்த 3 நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது மற்ற நாடுகள் தாக்குதல் நடத்தினால், மீதமுள்ள இரண்டு நாடுகளும் உடனடியாக போரில் இறங்க வேண்டும். ஆனால், சவுதி மீது ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கவில்லை.

மக்கா ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை என்று சவுதி டென்ஷனில் இருக்கிறது. எனவே சவுதியை சாந்தப்படுத்தும் வேலையை தற்போது பாகிஸ்தான் தொடங்கியிருக்கிறது. என்னதான் சமாதானம் சொன்னாலும், ஆபத்து நேரத்தில் உதவுபவனே உற்ற நண்பன் என்பதை இந்நேரம் சவுதி உணர்ந்திருக்கும்.

Pakistan

என்ன நடந்தது?

சவுதி மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியார்கள் திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல் காரணமாக ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் ராணுவம் களமிறங்கியிருக்க வேண்டும். எதிர்பார்த்ததை போல, பாகிஸ்தானும் இது குறித்து பாசிட்டிவாக அறிவித்தது. அதாவது, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நாங்கள் வருவோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியிருந்தார்.

பின்னர் பாகிஸ்தான் என்ன நினைத்ததோ தெரியவில்லை, அடுத்த சில நாட்களிலேயே இந்த விஷயத்திலிருந்து பாகிஸ்தான் பேக் அடித்தது. இந்த ஒப்பந்தம் முழுவதும் தற்காப்பு சார்ந்ததே தவிர, சவுதிக்காக ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக எங்கள் ராணுவம் எந்த ஒரு நேரடி தாக்குதலையும் நடத்தாது என்று பாகிஸ்தான் அறிவித்தது. இது சவுதிக்கு கடும் அதிருப்தியை உருவாக்கியது. ஆபத்து நேரத்தில் உதவுபவனே உண்மையான நண்பன். ஒப்பந்தம் போட்டும் உதவிக்கு வராத பாகிஸ்தானை இனி நம்பவே கூடாது என்று சவுதி முடிவுக்கு வந்துவிட்டது.

ஏற்கெனவே பாகிஸ்தானின் பெயர் சர்வதேச அளவில் ரொம்பவே டேமேஜாகியிருக்கிறது. இப்படியே போனால்.. இன்னும் மோசமான பெயர் வந்துவிடும் என்று பயந்த பாகிஸ்தான், உடனடியாக டேமேஜ் கண்ட்ரோலில் இறங்கியது. சவுதி இளவரசருடன் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், சவுதியின் சிவிலியன் மற்றும் பொருளாதார கட்டமைப்புகள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்களை கடுமையாக கண்டித்தார். மேலும், இந்த தாக்குதல்கள் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் எரிசக்தி விநியோகத்தை பாதிக்கும் என்பதால் சவுதி மக்களுக்கு பாகிஸ்தான் என்றும் துணையாக நிற்கும் என்றும் கூறினார்.

பாகிஸ்தானின் இந்த தூதரக விளக்கத்தை காதில் வாங்கிக்கொண்ட சவுதி, சரி போய் தொலையட்டும் என்று பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை வைத்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், பாகிஸ்தான் என்ன விளக்கம் சொன்னாலும்.. ஆபத்து நேரத்தில் எட்டி கூட பார்க்காதது அந்நாட்டின் மீதான மதிப்பை குறைத்திருக்கிறது. இனி எதிர் காலங்களில் சவுதி-பாக். ஒப்பந்தங்கள் எதிர்பார்த்ததை விட குறைவாகவே போடப்படும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

English summary

Pakistan had recently entered into the ‘Makkah Agreement’ with Saudi Arabia and Turkey. Under this pact, if any one of the three nations were attacked by another party, the remaining two would be obliged to immediately join the war. However, Pakistan did not retaliate against the attack launched by Yemeni rebels on Saudi Arabia.

Read More

Previous Post

வாகனங்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடி விற்ற இருவர் கைது – Sri Lanka Tamil News

Next Post

Gold Price Down | விநாயகர் சதுர்த்தியில் ஜாக்பாட்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Down | விநாயகர் சதுர்த்தியில் ஜாக்பாட்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Price Down | விநாயகர் சதுர்த்தியில் ஜாக்பாட்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin