Last Updated:
அசாம் மாநிலத்தில் உரத்தொழிற்சாலை அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டினார்.
வாக்கு வங்கிக்காக வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்களை அசாம் மாநிலத்திற்குள் குடியேற காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, திப்ரூகர் மாவட்டத்தில் நம்ரூப் பகுதியில் 10 ஆயிரம் கோடி மதிப்பிலான உரத்தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து பேசிய அவர், தேசத்திற்கு எதிரான சித்தாந்தங்களை காங்கிரஸ் கட்சி ஊக்குவிப்பதாக கூறினார். அசாம் மாநிலத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு சிறிதும் அக்கறை இல்லை எனக்கூறிய பிரதமர் மோடி,
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்களை பாதுகாக்கவே எஸ்.ஐ.ஆர்.- ஐ காங்கிரஸ் எதிர்ப்பதாக குற்றம்சாட்டினார்.


