பீகார் சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொண்டது.
இதில், ஏறத்தாழ 22 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்ததாகவும், 36 லட்சம் பேர் பீகாரில் இருந்து நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 36 லட்சம் பேரில் சுமார் 6.50 லட்சம் பேர் தமிழ்நாட்டில் இருப்பதாகவும், தமிழ்நாட்டிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளும்போது, இவர்கள் மனு அளித்து அதை தேர்தல் ஆணையம் ஏற்றால் அவர்கள் இங்கேயே வாக்களிப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.
முன்னதாக மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டதாக பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தது. இதேபோல், கர்நாடகாவில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியை எடுத்து ஆய்வு செய்ததாகவும், அதில் பெரும் அளவு முறைகேடு நடந்ததாகவும் அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு தன்னிடம் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
#WATCH | Delhi: “We have open and shut proof that the Election Commission is involved in vote theft… Most importantly, whoever in the Elections Commission is involved in this exercise, right from top to bottom, we will not spare you. You are working against India and this no… pic.twitter.com/vrP5ZUZoym
— ANI (@ANI) August 1, 2025
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளது என்பதற்கான வெளிப்படையான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மிக முக்கியமாக, தேர்தல் ஆணையத்தில் யார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், உயர் பொறுப்பில் இருப்பவர்கள் முதல் அடிமட்ட ஊழியர் வரை யாராக இருந்தாலும் நாங்கள் உங்களை விடமாட்டோம். நீங்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறீர்கள். இது தேசத்துரோகத்திற்கு சற்றும் குறைவில்லாதது” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், “ராகுல் காந்திக்கு கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி ஒரு மின்னஞ்சல் அனுப்பியது. ஆனால் அவர் வரவில்லை. அதே தேதியில் அவருக்குக் கடிதமும் அனுப்பப்பட்டது. அதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை.
Election Commission of India’s further response to Lok Sabha LoP Rahul Gandhi –
“1. ECI sends a mail to him on 12 June 2025. He does not come.
2. ECI sends him a letter on 12 June 2025, he does not respond.
3. He has never sent any letter to ECI on any issue, whatsoever.
4.… pic.twitter.com/8JRTica7Qk
— ANI (@ANI) August 1, 2025
எந்தப் பிரச்சினை குறித்தும் அவர் தேர்தல் ஆணையத்திற்கு எந்தக் கடிதமும் அனுப்பவில்லை. தற்போது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தேர்தல் ஆணையத்தையும், அதன் ஊழியர்களையும் அச்சுறுத்தத் தொடங்கியிருப்பது விசித்திரமாக உள்ளது. மேலும், இது வருந்தத்தக்க ஒன்று. தேர்தல் ஆணையம் இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளைப் புறக்கணித்து, அதன் அனைத்து ஊழியர்களையும் பாரபட்சமின்றி வெளிப்படையாக தொடர்ந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளது.
August 01, 2025 9:27 PM IST
“வாக்கு திருட்டில் ஈடுபடும் தேர்தல் ஆணையம் தப்பிக்க முடியாது..” – பகிரங்க எச்சரிக்கை விடுத்த ராகுல் காந்தி