Last Updated:
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் அமித் ஷா, நாட்டில் முதலில் வாக்குத் திருட்டில் ஈடுபட்டது முன்னாள் பிரதமர் நேரு எனத் தெரிவித்துள்ளார்.
வாக்குத் திருட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் சூழலில், முன்னாள் பிரதமர் நேரு தான் முதன்முதலில் வாக்குத் திருட்டில் ஈடுபட்டது என அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி குறித்தும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன. இதன் காரணமாக கடந்த 1ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவந்ததால், அவை தொடர்ந்து முடங்கி வந்தது. இதனையடுத்து, டிசம்பர் 8ஆம் தேதி திங்கள்கிழமை வந்தே மாதரம் 150வது ஆண்டு குறித்தான விவாதமும், 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்தல் சீர்திருத்தம் குறித்தான விவாதமும் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என முடிவானது.
தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் பிரதமர், மத்திய துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என நான் இருக்கிறேன். எனக்கு அந்தக் குழுவில் எந்த அதிகாரமும் இல்லை” எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
#WATCH | Speaking on electoral reforms, in Lok Sabha, Union HM Amit Shah says, “I would like to tell you about 3 incidents of voter chori. First, after independence, the PM of the country was to be elected…Sardar Patel got 28 votes and Jawaharlal Nehru got 2 votes. But… pic.twitter.com/PaHocH0lzw
— ANI (@ANI) December 10, 2025
தொடர்ந்து பேசிய அமித்ஷா, “நாட்டில் நடந்த முதல் வாக்காளர் திருட்டு பற்றி இங்கு சொல்ல விரும்புகிறேன். சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டின் முதல் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். சர்தார் வல்லபாய் படேல் 28 வாக்குகளைப் பெற்றார். நேரு 2 வாக்குகளை மட்டுமே பெற்றார். ஆனால், நேரு நாட்டின் பிரதமரானார்” எனத் தெரிவித்தார்.
December 10, 2025 6:43 PM IST
“சுதந்திர இந்தியாவில் முதல் வாக்குத் திருட்டில் ஈடுபட்டது நேரு..” – நாடாளுமன்றத்தில் அமித்ஷா பரபரப்பு


