புது தில்லி: போலியான வாக்குக் கணிப்புகளை வெளியிட்டதால் பங்குச் சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, வாக்குக் கணிப்பு வெளியானதற்கு பிறகு பங்குச் சந்தைகளில் 3.39 சதவீதம் உயர்வுகண்டன. அதேவேளையில், தேர்தல் முடிவுகள் வெளியானதும் பங்குச் சந்தைகள் 6 சதவீதம் சரிவு கண்டன. இதனால், பங்குச் சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், சிலர் பணம் சம்பாதிக்க பிரதமரும் உள்துறை அமைச்சரும் உதவியிருக்கிறாக்ரள். பங்குச் சந்தை உயர்வு குறித்து ஏன் மோடி வெளிப்படையாக பேச வேண்டும். பாஜகவினருக்கு பங்குச் சந்தை குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட கருத்துக் கணிப்பை திணித்துள்ளனர்.

&w=1200&resize=1200,675&ssl=1)