தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு முழுக்க உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து வாக்களிக்க தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வருகைதந்தார்.
இதையடுத்து அங்கிருந்த தொண்டர்கள் விஜய்யை பார்க்க முண்டியடித்த போது போடப்பட்டிருந்த சாமியான பந்தல் சரிந்து விழுந்தது.
2021 சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் வந்து வாக்களித்த விஜய் இம்முறை காரில் வருகை தந்தார். இதையடுத்து வாக்குச்சாவடி உள்ளே சென்ற விஜய், வாக்களித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில் 233 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
#WATCH | Tamil Nadu Elections 2026 | Vijay, TVK chief and candidate from Tiruchirappalli East and Perambur constituencies, arrives at a polling station in Chennai to cast his vote. pic.twitter.com/VYZ33KXHLE
— ANI (@ANI) April 23, 2026

