Last Updated:
வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும்போது தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துச் செல்ல வசதி ஏற்படுத்த தர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தலில் வாக்களிக்கச் செல்பவர்கள் இனி கையில் செல்போன் எடுத்துச் செல்வதை நினைத்து கவலைப்படத் தேவையில்லை.
வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை ரகசியமாக வைத்திருக்க தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு மையங்களுக்குள் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்கள் தவிர்த்து, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் யாரும் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. எனினும் வாக்காளர்கள் சிலர் வாக்குப்பதிவு மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தேர்தல் விதிகளை கடுமையாக செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும்போது தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்து செல்ல வசதி ஏற்படுத்தத் தர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே தங்களது செல்போன்களை வைத்துச் செல்வதற்காக அலமாரி வசதி ஏற்படுத்தி தரப்பட உள்ளது.
மேலும், வாக்குச்சாவடி அலுவலர்களால் வழங்கப்படும் பூத் சிலிப்புகளை வாக்குப்பதிவு தினத்தன்று, வாக்காளர்கள் எடுத்து செல்லாத பட்சத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகளை வழங்கும் வகையில் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கூடாரம் அமைத்துக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
May 25, 2025 11:32 AM IST


