Last Updated:
நேபாள இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி, தேர்தலில் வாக்களிக்கும் வயதை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இந்த மாத துவக்கத்தில் நடந்த இளைஞர்களின் ஊழலுக்கு எதிரான போராட்டம் காரணமாக அங்கு பெரும் கலவரம் வெடித்தது. கலவரக்காரர்கள், அந்நாட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், பிரதமர், அமைச்சர்களின் வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு தீவைத்தனர்.
பெரும் கலவரம், உயிரிழப்புகளைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமராக இருந்த சர்மா ஒலி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிபர் ஆகியோர் தொடர்ந்து ராஜினாமா செய்தனர். இதனையடுத்து ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்து அங்கு போராட்டத்தை ஒடுக்கி அமைதியை கொண்டுவந்தது.
இதனையடுத்து, நேபாள உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சுஷிலா கார்கி இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி, நேபாளத்தில் தேர்தலில் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18ல் இருந்து 16ஆக குறைத்து அறிவித்துள்ளார்.
மேலும், 2026ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் நேபாள நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்று நாட்டின் வருங்காலத்தை செதுக்கும் பணியில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி கேட்டுக் கொண்டார்.
September 26, 2025 6:55 PM IST
வாக்களிக்கும் வயதை அதிரடியாக குறைத்த நேபாள இடைக்கால பிரதமர்! எந்த வயதினர் வாக்களிக்கலாம் தெரியுமா?


