சிங்கப்பூரில் வாகன ஓட்டிகளுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் 2026 ஜனவரி 1 அமலுக்கு வரும் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதிவேகமாக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கும், லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தாத உரிமையாளர்களுக்கும் Demerit points என்று சொல்லப்படும் குற்றப் புள்ளிகளும் அதிக அபராதங்களும் விதிக்கப்படும்.
சிங்கப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசி அவசியம் – CDA
பிரம்மாண்டமான முறையில் மீண்டும் திறப்பு விழா காணும் “கலாம் உணவகம்”
இது 2026 ஜனவரி 1, முதல் நடப்புக்கு வரும் என்றும் உள்துறை அமைச்சு தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இனி, இலகுரக வாகனங்களை ஓட்டுபவர்கள் மணிக்கு 20 கிலோமீட்டர் என்ற வேக வரம்பை மீறினால் அவர்களுக்கு ஆறு குற்றப் புள்ளிகளும் 200 டாலர் அபராதமும் விதிக்கப்படும்.
தற்போது, இந்த விதிமீறலுக்கு 4 குற்றப் புள்ளிகளும் 150 டாலர் அபராதமும் விதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல, வேக வரம்பை மீறி மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 18 குற்றப் புள்ளிகள் வழங்கப்பட்டு, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இதற்கு முன்னதாக, இந்த விதிமீறலுக்கு 12 குறைப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.
Friendly ஸ்ட்ரீட்ஸ், பள்ளி மற்றும் முதியோர் வட்டாரங்கள், அதிக பாதசாரிகள் நடமாட்டம் உள்ள சாலைகளில் இனி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
2026 ஜனவரி 1 க்குள் லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை உடனடியாகப் பொருத்துமாறும் போக்குவரத்துக் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

