Last Updated:
ஐதராபாத்தில் பிக்பாஸ் சலூனில் வழுக்கை தலையில் முடி வளர லோஷன் பயன்படுத்தியதால் 500க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
வழுக்கை தலையில் முடி வளர சலூன் கடைக்காரர் கொடுத்த லோஷனால் பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத், சண்டுலால் பகுதியில் பிக்பாஸ் என்ற சலூன் கடையில், வழுக்கை தலையில் மீண்டும் முடி வளர வைக்க லோஷன் கொடுப்பதாக தகவல் பரவியது. இதனை அறிந்த 500க்கும் மேற்பட்ட ஆண்கள், அந்த கடையில் குவிந்தனர். இதையடுத்து, கடைக்கு வந்தவர்களின் தலையில் முழுமையாக முடியை ஷேவ் செய்துவிட்டு, வெள்ளை நிற லோஷனை சலூன் கடைக்காரரான வகில் சல்மானி தடவி இருக்கிறார்.
Bald men land in hospital in Hyderabad after trying “Hair Regrowth lotion” @TheSiasatDaily #Hyderabad #Bald pic.twitter.com/QNmxR9vQVU
— Mohammed Baleegh (@MohammedBaleeg2) April 7, 2025
இந்நிலையில், 3 நாட்களுக்கு சோப், ஷாம்பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என்றும் அவர் வாடிக்கையாளர்களிடம் கூறி உள்ளார். முடி வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அனைவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பலருக்கு கடுமையான தலைவலி உள்ளிட்டவை ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையறிந்த சலூன் கடைக்காரர் கடையை அடைத்துவிட்டு தலைமறைவானார்.
Hyderabad,Telangana
April 11, 2025 5:42 PM IST


