பெட்டாலிங் ஜெயா,
செப்பாங், பாண்டார் பாரு சாலாக் திங்கியில் உள்ள ஒரு இந்து கோவிலில் இடைக்கால பூசாரியாக பணியாற்றிய ஒரு வெளிநாட்டவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர், 27 வயதான ஒரு பெண்ணை வழிபாட்டின்போது போது தொல்லை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் ஜூலை 4 ஆம் தேதி புகார் அளித்துள்ளதாகவும், வழிபாட்டில் போது முகம் மற்றும் உடலில் நீர் தெளித்து சந்தேகநபர் தன்னைத் தொல்லையாக்கியதாக கூறியுள்ளார் என சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைவர் நோர்ஹிசாம் பஹாமான் தெரிவித்துள்ளார்.
கோவிலின் நிரந்தர பூசாரி அந்நேரத்தில் வெளிநாட்டில் இருந்த காரணத்தால், சந்தேகநபர் இடைக்கால பூசாரியாக செயற்பட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு மலேசிய பிரிவு 354 கீழ் அவ மரியாதை செய்யும் நோக்கில் வன்முறையை பயன்படுத்தியதாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் வரை சிறை, அல்லது பிரம்பிடிகள், அல்லது பணதண்டனை, அல்லது இவற்றில் எந்த இரண்டையும் விதிக்கலாம்.
இந்த வழக்கில் இன, மதச் சார்புடைய பாகுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் தெரிவிக்கக் கூடாது என்றும், உரிய சட்ட நடவடிக்கையை போலீசார் நேர்மையாக மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் பொதுமக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டுமென நோர்ஹிசாம் பஹாமான் கேட்டுக் கொண்டார்.