Last Updated:
தொடர்ந்து பாக்டீரியா பரவியதால் சில உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு பாதிப்பு பரவாமல் இருக்க, வேறு வழியின்றி அவரின் இரு கைகளையும், முழங்காலுக்கு கீழ் இரு கால்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
பிரிட்டணில் வளர்ப்பு நாய் நக்கியதால், Sepsis என்ற நோய்த்தொற்று ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று மீண்டுள்ளார் மன்ஜீத் சங்கா (52) என்ற பெண். இச்சம்பவம் உலகளவில் நாய் மூலம் பரவும் தொற்று குறித்து பல்வேறு சந்தேகங்களையும் அச்சங்களையும் எழுப்பியுள்ளது.
சம்பவத்தின்படி பிரிட்டனை சேர்ந்த மன்ஜித் சங்கா என்ற பெண், கடந்த ஜூலை மாதம் இவருக்கு திடீரென மூச்சுவிடவே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது பரிசோதித்தபோதுதான் இவருக்கு செப்ஸிஸ் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது நாய்களின் உமிழ்நீர் மூலம் பரவும் நோய். நாய்களின் உமிழ்நீரிலுள்ள Capnocytophaga canimorsus என்ற பாக்டீரியா, அது நக்கும்போது தோல்களின் வழியே பரவி இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்ட பின்னர் மன்ஜீத் கோமா நிலைக்கு சென்றுள்ளார். கிட்டத்தட்ட 6 முறைக்கும் மேல் அவரது இதயத்துடிப்பு நின்ற நிலையில், உயிரை காப்பாற்ற ஒவ்வொருமுறையும் மருத்துவர்கள் அதை துடிக்க வைத்துள்ளனர்.

இருப்பினும் தொடர்ந்து பாக்டீரியா பரவியதால் சில உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு பாதிப்பு பரவாமல் இருக்க, வேறு வழியின்றி அவரின் இரு கைகளையும், முழங்காலுக்கு கீழ் இரு கால்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கை, கால்கள் மட்டுமன்றி மன்ஜித்தின் மண்ணீரலும் அகற்றப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 32 வார சிகிச்சைக்குப் பிறகே அவர் வீடு திரும்பியிருக்கிறார்.

