இந்த உலகம் தன்னுள் பல்வேறு அதிசயங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் தனி சிறப்பும், மிகவும் வித்தியாசமான தோற்றமும் கொண்டிருக்கும். குறிப்பாக கடல்வாழ் உயிரினங்கள் சற்று வியப்பை ஏற்படுத்த கூடியவையாக இருக்கும். இது குறித்த பல்வேறு செய்திகள் அவ்வப்போது வெளிவரும்.
தற்போது அதுபோன்ற ஒரு செய்தி வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பீகார் மாநிலம், மதுபானியில் மீனவர்களின் வலையில் சுமார் 125 கிலோ எடை கொண்ட ராட்சத மீன் ஒன்று சிக்கியுள்ளது. இந்த அதிசய மீனை பார்க்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர்.
குஜராத்தின் மதுபானியில் வழக்கம்போல மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது இரண்டு மீனவர்கள் மீன்பிடிக்க ஆற்றுக்குள் இறங்கியபோது, நீருக்குள் ஏதோ பெரிய உயிரினம் இருப்பதை பார்த்துள்ளனர். அதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த மீனவர்கள் ஆற்றில் வலை வீசியபோது, சுமார் 125 கிலோ எடை கொண்ட ஒரு ராட்சத மீன் அந்த வலையில் சிக்கியது. இதை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனென்றால் அவர்கள் அதுவரை அவ்வளவு பெரிய மீனை பார்த்ததில்லை.
பின்னர் அந்த மீனை ஏலம் வீட மீனவர்கள் ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் மீனை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் மீனை பிடித்தவர் அதனை தனது வீட்டின் தண்ணீர் தொட்டியில் வைத்துள்ளார்.
இதையும் படிங்க : Watch : சுவாசிக்கும் நிலம்.. பூமியில் இருந்து வெளியேறும் காற்று.. வியப்பில் மக்கள்
சிலர் இந்த மீனை ஆறுகளில் வாழும் பெரிய வகை மீன் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சிலரோ இந்த மீன் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கலாம் என கூறுகின்றனர். ஆனால் அந்த மீன் எங்கிருந்து வந்தது, என்ன வகையை சேர்ந்தது என இதுவரை தெரியவில்லை.
.
&w=750&resize=750,375&ssl=1)
