• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வலி வடக்கு காணி விடுவிப்பு : தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கபட நாடகம் :பலாலி மக்கள் குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வலி வடக்கு காணி விடுவிப்பு : தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கபட நாடகம் :பலாலி மக்கள் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அனுர
தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி வடக்கு காணிகளை
விடுவிக்காது கபட நாடகம் ஆடுவதாக பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து
கொண்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பலாலி காணி விடுவிப்பு கோரி மக்கள் போராட்டம் 14வது வாரமாக
இடம்பெற்ற நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்
இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

எமது வளமான காணிக்குள் விவசாயம் செய்யும் இராணுவம்

 போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் யுத்தம் நிறைவடைந்து
17 வருடங்கள் கடக்கின்ற நிலையில் எமது நிலத்தை விட்டு சென்று 35 வருடங்கள்
கடக்கின்றது.

வலி வடக்கு காணி விடுவிப்பு : தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கபட நாடகம் :பலாலி மக்கள் குற்றச்சாட்டு | Valikamam North Land Release Issue

இன்றும் நாம் அனாதைகளாக வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையில் எங்களின்
வளமான காணிகளுக்குள் இராணுவம் விவசாயம் செய்து மேலதிக வருமானத்தை உழைத்து
வருகிறது.

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவித்த விடயம்

தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி
தேர்தலுக்காக யாழ்ப்பாணம் வந்த நிலையில் பாதுகாப்பு தரப்பிடமுள்ள மக்களின்
காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கினார்.

கொடுத்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாமல் இரண்டு வருடங்கள் கடந்து
விட்டது.

வலி வடக்கு காணி விடுவிப்பு : தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கபட நாடகம் :பலாலி மக்கள் குற்றச்சாட்டு | Valikamam North Land Release Issue

அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதி பாதுகாப்பு அமைச்சர், வலி வடக்கில்
பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் காணிகளை பார்வையிட்ட பின்னர் மக்களின்
காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

பிரதி பாதுகாப்பு அமைச்சரின் முரண்பாடான கருத்து

ஆனால் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் இராணுவத்தேவைக்காக 1700 ஏக்கரும்
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக 700 ஏக்கர் வேண்டும் என கூறுகிறார்.

வலி வடக்கு காணி விடுவிப்பு : தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கபட நாடகம் :பலாலி மக்கள் குற்றச்சாட்டு | Valikamam North Land Release Issue

யாழ்ப்பாணத்தில் ஒரு கருத்தையும் நாடாளுமன்றத்தில் ஒரு கருத்தையும் கூறும்
அனுரகுமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறு
நம்புவது

கொடுத்த வாக்குறுதி உதாசீனம் 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுர தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ்
மக்கள் கணிசமான பங்களிப்பை வழங்கிய நிலையில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை
உதாசீனம் செய்துவருகிறார்.

வலி வடக்கு காணி விடுவிப்பு : தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கபட நாடகம் :பலாலி மக்கள் குற்றச்சாட்டு | Valikamam North Land Release Issue

கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதைய அனுர தலைமையிலான அரசாங்கம் மிகக் குறைவான
காணிகளை விடுவித்துள்ள நிலையில் வழங்கிய வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற
வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

ஆதரவைத் திரட்டுவதற்காக இனப் பிரச்சினைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என அன்வார் கட்சிகளுக்கு நினைவூட்டுகிறார் – Malaysiakini

Next Post

தினமும் லட்சக்கணக்கான பயணிகள்! இந்தியாவின் மிகவும் பிஸியான ரயில் நிலையங்கள் எவை தெரியுமா? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In