Last Updated:
இந்தியா அதிக எண்ணிக்கையிலான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளது என்றும் அதேசமயம் பாகிஸ்தான் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 45 சதவீதம் பேர் வறுமையில் வாழ்கிறார்கள் என்றும், 16.5 சதவீதம் பேர் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள் என்றும் உலக வங்கி கூறியுள்ளது.
இந்தியா அதிக எண்ணிக்கையிலான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளது என்றும், பாகிஸ்தான் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 45 சதவீதம் பேர் வறுமையில் வாழ்கிறார்கள் என்றும், 16.5 சதவீதம் பேர் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் உலக வங்கி வறுமைக் கோட்டின் வரம்பைத் திருத்திய நிலையில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் செய்த மதிப்பீட்டின்படி, 2024-25ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் கூடுதலாக 1.9 மில்லியன் மக்கள் வறுமையில் விழுந்ததாக உலக வங்கி கூறுகிறது. இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நோக்கங்களுக்காக பாகிஸ்தான் உலகளாவிய உதவியைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்று சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் முன் இந்தியா ஏற்கனவே வழக்குத் தொடுத்து வருகிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற நிறுவனங்களின் உலகளாவிய உதவியை பாகிஸ்தான் தனது பொது மக்களின் நலனுக்காக எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது குறித்து வலுவான சந்தேகங்களை எழுப்ப உலக வங்கியின் இந்தத் தரவுகளை இந்தியா இனி பயன்படுத்தலாம்.
உலக வங்கி அதன் வறுமைக் கோட்டின் உச்சவரம்பை ஒரு நாளைக்கு $3 ஆக உயர்த்தியுள்ள நிலையில், இந்தியாவின் தீவிர வறுமை விகிதம் 2011-12 ஆம் ஆண்டில் 27.1 சதவீதத்திலிருந்து அடுத்த 10 ஆண்டில் 5.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2011-12 மற்றும் 2022-23க்கு இடையிலான காலத்தில், இந்தியா 171 மில்லியன் மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தான் குறித்த உலக வங்கி அறிக்கை, நாட்டின் 2.6 சதவீத பொருளாதார வளர்ச்சி “வறுமையைக் குறைக்கப் போதுமானதாக இல்லை” என்று கூறியது. பாகிஸ்தானில் 2025 நிதியாண்டில் வறுமை விகிதம் 42.4 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட எந்த விதத்திலும் மாறவில்லை என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
2025-ம் ஆண்டில், வானிலை நிலைமைகள் மோசமடைந்து மழைப்பொழிவு 40 சதவீதம் குறைந்ததோடு, பூச்சித் தாக்குதல்கள் மற்றும் உற்பத்தித் தேர்வுகள் மாறியதால், பாகிஸ்தானில் விவசாயத் துறை குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. “பருத்திக்கு 29.6 சதவீதமும், அரிசிக்கு 1.2 சதவீதமும் எனப் பயிர் மகசூல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விவசாயத் துறை வளர்ச்சியை 2 சதவீதத்திற்கும் குறைவாக ஆக்குகிறது” என்று இந்த அறிக்கை கூறுகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால், பாகிஸ்தானின் பஞ்சாபிற்கான நீர் ஓட்டமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானில் விவசாய விளைச்சலையும் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கக்கூடும்.
“ஏழைகளில் பெரும்பாலானோர் வேளாண் துறையில் பணியாற்றுவதால், கிராமப்புற வறுமை சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (0.2 சதவீதப் புள்ளிகள்). அதே நேரத்தில் விவசாயத் தொழிலாளர்களின் உண்மையான வருமானம் 2025 நிதியாண்டில் 0.7 சதவீதம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்புக் கவலைகள் அதிகமாக உள்ளதோடு, கிராமப்புறங்களில் 10 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்” என்று அறிக்கை கூறுகிறது.
June 09, 2025 12:51 PM IST
வறுமையை வெகுவாக குறைத்த இந்தியா.. பாகிஸ்தான் மக்கள் தொகையில் 45% பேர் ஏழைகள்.. உலக வங்கி அறிக்கை!


