Last Updated:
Donald Trump | இதற்கிடையே, வரும் 31ஆம் தேதி தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் அதிபர் ஜிஜிங் பிங்கை டிரம்ப் சந்தித்து பேசுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி சீனா மீது 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், ஸ்மார்ட்போன், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்ய தேவைப்படும் அரியவகை கனிமங்கள் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்த சீனா முடிவு செய்துள்ளதாகவும், இது அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்த சீனா திட்டமிட்டு இருந்ததாக கூறியுள்ள டிரம்ப், சீனாவின் இத்தகைய யுக்தியை சர்வதேச சந்தையில் எங்கும் தான் கண்டதில்லை என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், சீனா இந்த வரி விதிப்பை அமெரிக்காவுக்கு மட்டும் உயர்த்தவில்லை என்றும் அனைத்து நாடுகளுக்கும் உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.
சீனப் பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 100 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், வரும் 31ஆம் தேதி தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் அதிபர் ஜிஜிங் பிங்கை டிரம்ப் சந்தித்து பேசுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
October 11, 2025 1:18 PM IST
வர்த்தக போர்.. சீனா மீது கூடுதலாக 100% வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்.. சர்வதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு!


