மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதில் வரி விலக்கு மற்றும் நிலையான விலக்குகளுக்கான வரம்புகளை உயர்த்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது வரி வரி அடுக்குகள் மற்றும் விகிதங்களைப் பார்க்கலாம்.
2023 பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பின் கீழ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.50,000 உயர்த்தி, ரூ.3 லட்சமாக உயர்த்தினார். மேலும் வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 87ஏ கீழ் தள்ளுபடியும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதாவது, புதிய வரி முறையின்படி, ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் எந்த வரியும் செலுத்த தேவையில்லை.
அதாவது, ரூ.2,50,000 வரை வருமானம் ஈட்டுபவர்கள் பழைய மற்றும் புதிய வரி முறைகளில் வரி செலுத்த தேவையில்லை. ரூ.2,50,000 முதல் ரூ.3,00,000 வரை வருமானம் ஈட்டுவோர் பழைய முறையில் 5 சதவீத வரி செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் புதிய முறையில் வரி செலுத்த வேண்டியதில்லை. ரூ,3,00,001 முதல் ரூ.5,00,000 வரை வருமானம் ஈட்டுவோர் பழைய மற்றும் புதிய முறையில் 5 சதவீத வரியை செலுத்த வேண்டும்.
ரூ.5,00,001 முதல் ரூ.6,00,000 வரையினால வருமானத்திற்கு பழைய முறையில் 20 சதவீதமும், புதிய முறையில் 5 சதவீதமும் வரி செலுத்த வேண்டும். ரூ.6,00,001 முதல் ரூ.9,00,000 வரையிலான வருமானத்திற்கு பழைய முறையில் 20 சதவீதமும், புதிய முறையில் 10 சதவீதமும் வரி செலுத்த வேண்டும். ரூ,9,00,001 முதல் ரூ.10,00,000 வரையிலான வருமானத்திற்கு பழைய முறையில் 20 சதவீதமும், புதிய முறையில் 15 சதவீதமும் வரி செலுத்த வேண்டும். ரூ.10,00,001 முதல் ரூ.12,00,000 வரையிலான வருமானத்திற்கு பழைய முறையில் 30 சதவீதமும், புதிய முறையில் 15 சதவீதமும் வரி செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க:
கேஜிஎஃப் எல்லாம் ஜுஜுபி… உலகிலேயே அதிக தங்கத்தை வெட்டியெடுத்த நபர் யாருனு தெரியுமா?
ரூ.12,00,001 முதல் ரூ.15,00,000 வரையிலான வருமானத்திற்கு பழைய முறையில் 30 சதவீதமும், புதிய முறையில் 20 சதவீதமும் வரி செலுத்த வேண்டும். ரூ.15,00,001 மேல் உள்ள வருமானத்திற்கு பழைய மற்றும் புதிய முறைகளில் தலா 30 சதவீத வரியும் செலுத்த வேண்டும். இதில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பழைய முறையில் ரூ,3,00,000 வரை விலக்கு அளிக்கப்படுகிறது. 80 வயதுக்கு மேல் உள்ள உயர் மூத்த குடிமக்களுக்கு ரூ,5,00,000 வரையிலான வருமானத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. புதிய முறையில் குடியுரிமை பெற்ற தனிநபர் வருமானம் ரூ.7 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் பிரிவு 87ஏ கீழ் தள்ளுபடி பெறலாம். வருமான வரியில் 100 சதவீதம் அல்லது ரூ,25,000 இதில் எது குறைவோ அதை தள்ளுபடியாக பெறலாம்.
மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு என்ன?
புதிதாக வரி செலுத்துவோர் புதிய வரி விதிப்பில் இருப்பதால், பழைய வரி முறையை நீக்கிவிட்டு, ஒருங்கிணைந்த ஒற்றை வரி முறையை கொண்டுவரலாம் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, இன்றைய பட்ஜெட்டில் ரூ.3 லட்சமாக இருக்கும் வரி விலக்கு வரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
அத்துடன், ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுவோர் இன்னும் பழைய வரி முறையிலேயே இருப்பதால், அவர்களை புதிய முறைக்கு கொண்டுவர பட்ஜெட்டில் நடவடிக்கை இருக்கும் என்றும், புதிய முறையில் ரூ.15,00,001 முதல் ரூ.18,00,000 வரையிலான வருமானத்திற்கு 25 சதவீத வரியுடன் கூடிய புதிய ஸ்லாப் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது சம்பளம் பெறுவோரின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்றும், இதனால் நுகர்வு அதிகரித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு உதவும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
