• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வருமான வரி புதிய விகிதத்தில் ரூ.7.75 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை: மூத்த ஆடிட்டர்கள் தகவல் | up to Rs 7 lakh is not required to pay tax

GenevaTimes by GenevaTimes
July 25, 2024
in வணிகம்
Reading Time: 9 mins read
0
வருமான வரி புதிய விகிதத்தில் ரூ.7.75 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை: மூத்த ஆடிட்டர்கள் தகவல் | up to Rs 7 lakh is not required to pay tax
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: தனிநபர் வருமான வரி முறையில் பழைய வரி விகிதத்தில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.5 லட்சமாக நீடிக்கிறது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5 % வரி, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20% வரி, ரூ.10 லட்சத்துக்கு மேல் 30% வரி என்ற விகித முறை அப்படியே தொடர்கிறது.

புதிய வரி விகிதம்: தற்போதைய நடைமுறையின் படி புதிய வரி விகிதத்தில் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உள்ளது. ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 5% வரி, ரூ.6 லட்சம் முதல் ரூ.9லட்சம் வரை 10% வரி, ரூ.9லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15% வரி, ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20% வரி, ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி விதிக்கப்படுகிறது.

மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதிய வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை 5% வரி, ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10% வரி, ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15%, ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20% வரி, ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

புதிய வரி விகிதத்தில் நிரந்தர கழிவு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து குறித்து மூத்த ஆடிட்டர்கள் கூறியதாவது: வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 87ஏ-ன் கீழ் தள்ளுபடி பெறும்போது புதிய வரி விகிதத்தில் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. தற்போதைய மத்திய பட்ஜெட்டில் நிரந்தர கழிவுரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி ரூ.7.75 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆண்டு வருமானம் ரூ.7.75 லட்சத்தை தாண்டிவிட்டால் ரூ.3 லட்சம் வரை மட்டுமே வரிவிலக்கு வழங்கப்படும். ரூ.3 லட்சத்திலிருந்து வரி செலுத்த வேண்டும்.

புதிய வரி விகிதத்தின்படி ரூ.8.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு ரூ.27,500 வருமான வரி செலுத்த வேண்டும். மாத சம்பளதாரர்கள், தங்களது ஆடிட்டர்களுடன் ஆலோசனை நடத்தி அவரவர் ஊதியத்துக்கு ஏற்ப பழைய விகிதம் அல்லது புதிய விகிதத் தில் வருமான வரி செலுத்தலாம்.

இவ்வாறு மூத்த ஆடிட்டர்கள் தெரிவித்துள்ளனர்.



Read More

Previous Post

நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓடுபாதையில் சறுக்கி விழுந்தது | Nepal plane crash: 18 passengers killed with pilot lone survivor

Next Post

புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில் இருக்க வாய்ப்பு: சீனா, பெல்ஜியம் விஞ்ஞானிகள் தகவல் | Mercury Has Huge Deposits Of Diamonds

Next Post
புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில் இருக்க வாய்ப்பு: சீனா, பெல்ஜியம் விஞ்ஞானிகள் தகவல் | Mercury Has Huge Deposits Of Diamonds

புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில் இருக்க வாய்ப்பு: சீனா, பெல்ஜியம் விஞ்ஞானிகள் தகவல் | Mercury Has Huge Deposits Of Diamonds

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin