• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வருமான வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்!! அபராதமாக செலுத்திய பணம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு

GenevaTimes by GenevaTimes
April 3, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
வருமான வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்!! அபராதமாக செலுத்திய பணம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 03, 2025 5:13 PM IST

சரியான நேரத்தில் TDS மற்றும் TCS செலுத்தியிருந்தாலும், தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பணம் அரசு கணக்கில் தாமதமாக டெபாசிட் செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளனர்

News18News18
News18

வரி தாக்கல் செய்யும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அபராதம் செலுத்திய வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணம் TDS மற்றும் TCS ஆகியவற்றில் சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு உதவ மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) சமீபத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

வருமான வரி ரிட்டன் செய்தவர்களில் பலர் தங்கள் TDS மற்றும் TCS-ஐ சரியான நேரத்தில் செலுத்தியுள்ளார்கள். ஆனால் தொழில்நுட்பக் கோளாறுகளால், பணம் அரசுக் கணக்கிற்கு தாமதமாகச் சென்றடைந்தது. இருப்பினும், இந்த தாமதம் காரணமாக, வருமான வரி அதிகாரிகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 201(1A) (ii) மற்றும் 206C(7) இன் கீழ் கூடுதல் வட்டியை விதித்தனர். இப்போது அவர்களுக்கு நிவாரணம் வழங்க CBDT முன்வந்துள்ளது.

TDS மற்றும் TCS இரண்டும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டும். இந்தப் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், வட்டியை அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

சமீபத்தில், பல வரி செலுத்துவோர், சரியான நேரத்தில் TDS மற்றும் TCS செலுத்தியிருந்தாலும், ஆன்லைன் அமைப்பில் உள்ள சிக்கல்கள் அல்லது வங்கி தாமதங்கள் போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பணம் அரசு கணக்கில் தாமதமாக டெபாசிட் செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளனர். அது அவர்களின் தவறு இல்லையென்றாலும், இதற்காக வருமான வரித் துறை வட்டி வசூலித்தது. இது பல வரி செலுத்துவோருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இருப்பினும், இந்த சிக்கலை தீர்க்க CBDT களமிறங்கியுள்ளது. வரி செலுத்துவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது. வரி செலுத்துவோர் சரியான நேரத்திற்குள் TDS அல்லது TCS கட்டணத்தைச் செலுத்தினாலும், அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தொழில்நுட்ப காரணங்களால் தாமதம் ஏற்பட்டாலும், அவர்கள் இனி வட்டி செலுத்த வேண்டியதில்லை.

இந்த முடிவை செயல்படுத்த, வருமான வரி ஆணையர் (CCIT), வருமான வரி இயக்குநர் ஜெனரல் (DGIT) அல்லது வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் (PrCCIT) போன்ற மூத்த வரி அதிகாரிகளுக்கு CBDT அதிகாரம் அளித்துள்ளது. அவர்கள் இந்த வழக்குகளை மதிப்பாய்வு செய்து அபராதத் தொகையைத் திரும்பப் பெற ஒப்புதல் அளிக்கிறார்கள்.

அபராதம் ஏற்கனவே செலுத்தப்பட்டிருந்தால் என்ன செய்வது? இந்தப் பிரச்சினை காரணமாக ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். இருப்பினும், சிக்கல் ஏற்பட்ட நிதியாண்டின் இறுதியில் இருந்து ஒரு வருடத்திற்குள் அபராதத் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உதாரணமாக, 2024-25 நிதியாண்டில் (மார்ச் 31, 2025 உடன் முடிவடையும்) சிக்கல் ஏற்பட்டால், நீங்கள் மார்ச் 31, 2026 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
First Published :

April 03, 2025 5:13 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

வருமான வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்!! அபராதமாக செலுத்திய பணம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு

Read More

Previous Post

ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி | ஐபிஎல் 2025 | KKR vs SRH HIGHLIGHTS

Next Post

அரசாங்கத்திற்கு ‘வலுவான முன்மொழிவை’ முன்வைக்கக் கோயில் நிலம்குறித்த தகவல்களை இந்துச் சங்கம் கோருகிறது – Malaysiakini

Next Post
அரசாங்கத்திற்கு ‘வலுவான முன்மொழிவை’ முன்வைக்கக் கோயில் நிலம்குறித்த தகவல்களை இந்துச் சங்கம் கோருகிறது – Malaysiakini

அரசாங்கத்திற்கு ‘வலுவான முன்மொழிவை’ முன்வைக்கக் கோயில் நிலம்குறித்த தகவல்களை இந்துச் சங்கம் கோருகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin