2024-25 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 31 வரை வருமான வரித் துறை ஒரு மாதம் நீட்டிக்க வாய்ப்புள்ளது. ஜூலை 31 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 2.2 கோடி பேர் இன்னும் தங்கள் தாக்கல்களை முடிக்கவில்லை. இதற்குக் காரணம், வருமான வரி இணையதளத்தில் இருக்கும் தொழில்நுட்பக் கோளாறுகள்தான் வரி செலுத்துவோர் புகார் அளித்துளனர்.
இருப்பினும், வரி செலுத்துவோர் ஜூலை 31, 2024 க்கு முன் ஐடிஆர் தாக்கல் செய்ய வருமான வரித்துறை மீண்டும் வலியுறுத்தியது.
“நீங்கள் இதுவரை தாக்கல் செய்யவில்லை என்றால் உங்கள் ITR ஐ தாக்கல் செய்ய மறக்காதீர்கள். AY 2024-25 க்கான ITR ஐ தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2024 ஆகும்,” என்று வருமான வரித்துறை X இடுகையில் தெரிவித்துள்ளது.
Kind Attention Taxpayers!
Do remember to file your ITR if you haven’t filed yet.
The due date to file ITR for AY 2024-25 is 31st July, 2024.#FileNow pic.twitter.com/cm3yxE3u8R— Income Tax India (@IncomeTaxIndia) July 26, 2024
கடந்த ஆண்டு ஜூலை 31க்குள் சுமார் 6.77 கோடி ரிட்டர்ன்கள் சமர்பிக்கப்பட்டதுடன், ஐடிஆர் தாக்கல்களில் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை கண்டது. இப்போது, ஜூலை 26, 2024 நிலவரப்படி, 2024-25 க்கு சுமார் 4.6 கோடி ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு காணப்பட்ட போக்கு மற்றும் தற்போதைய வேகம் ஆகியவற்றின் அடிப்படையில், மீதமுள்ள வரி செலுத்துவோருக்கு வசதியாக காலக்கெடுவை நீட்டிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஐடிஆர் தாக்கல் குறைந்தது ஏன்?
வருமான வரித்துறை வல்லுநர்கள் மின்-தாக்கல் இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இ-ஃபைலிங் போர்டல், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இடைவிடாத தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டது, சில வரி செலுத்துவோர் தங்கள் தாக்கல்களை சரியான நேரத்தில் முடிக்க தடையாக உள்ளது. எனவே, ஒரு கால நீட்டிப்பு வழங்குவது சரியாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க :
குறைகிறதா பெட்ரோல், டீசல் விலை? மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்!
1947 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் மிகப் பழமையான வரி நிபுணர் சங்கமான வருமான வரி பார் அசோசியேஷன் (ITBA), காலக்கெடுவை நீட்டிக்க நிதி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. அதன்படி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
