• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வருகிறது ”Smart LPG Cylinder”: பெண்களே சிலிண்டர் எப்போ காலியாகும்னு கவலையே வேண்டாம்..!! | HPCL Smart LPG Cylinders: Real-Time Leak Alerts, Remote Notifications, and Safer Homes

GenevaTimes by GenevaTimes
July 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வருகிறது ”Smart LPG Cylinder”: பெண்களே சிலிண்டர் எப்போ காலியாகும்னு கவலையே வேண்டாம்..!! | HPCL Smart LPG Cylinders: Real-Time Leak Alerts, Remote Notifications, and Safer Homes
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வருகிறது ”Smart LPG Cylinder”: பெண்களே சிலிண்டர் எப்போ காலியாகும்னு கவலையே வேண்டாம்..!!

இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்கள் விறகு அடுப்புகளில் இருந்து மாறி கேஸ் அடுப்புகளை பயன்படுத்துகின்றன. உஜ்வாலா போன்ற திட்டங்களும் கேஸ் சிலிண்டர் விநியோக வளர்ச்சியும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

வீடு, கடை, மெஸ் என அனைத்து இடங்களிலும் கேஸ் சிலிண்டர்கள் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் கேஸ் சிலிண்டர்களை மிக பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. லேசாக கேஸ் கசிந்தாலும் பல பேரின் உயிரையே பறித்து கொள்ளும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஸ்மார்ட் சிலிண்டர்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

வருகிறது ”Smart LPG Cylinder”: பெண்களே சிலிண்டர் எப்போ காலியாகும்னு கவலையே வேண்டாம்..!!

குறிப்பாக நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில், பொதுத்துறை நிறுவனமான ஹெச்பி ஒரு முயற்சியை எடுத்துள்ளது. கேஸ் கசிவை உடனுக்குடன் கண்டறிந்து, பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்பும் வசதியுடன் கூடிய ‘ஸ்மார்ட் சிலிண்டர்களை’ அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி துருவ் கபில், நவீன சிலிண்டர்கள் சாதாரண சிலிண்டர்களை விட அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும் என டைம்ஸ் நவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சிலிண்டரில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால், அதை உடனடியாக கண்டறிந்து அந்த சாதனமே ஒலியின் மூலம் எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும் என கூறியுள்ளார்.

ஸ்மார்ட் சிலிண்டர்கள் இன்டர்நெட் அல்லது செயலி வசதியுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம், பயனர் வீட்டில் இல்லாத நேரத்திலும் கேஸ் கசிவு ஏற்பட்டால், அவரது மொபைலுக்கு உடனடி எச்சரிக்கை அனுப்பப்படும். அதே போல கேஸ் தீர்ந்து போவதற்கு முன்பே, சிலிண்டரின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை கண்காணித்து, சிலிண்டரை மாற்ற வேண்டிய நேரத்தை பயனர்களுக்கு முன்கூட்டியே நினைவுபடுத்தும் தொழில்நுட்பமும் இதில் சேர்க்கப்பட உள்ளது என தெரிவிக்கிறார்.

கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் என கூறும் அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் ஏற்படும் கசிவுகளை கவனிக்க முடியாத சூழலில், இந்த தொழில்நுட்பம் ஒரு சிறந்த பாதுகாப்பு அரணாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.

எனவே ஹெச்பி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரும் போது, வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும் கேஸ் சிலிண்டர் குறித்த பயம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக செல்லலாம். முதலில் ஹெச்பி நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை சோதனை அடிப்படையில் விரைவில் குறிப்பிட்ட சில நகரங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பொதுமக்களிடையே இந்தத் தொழில்நுட்பத்தின் வரவேற்பை பொறுத்து, நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹெச்பி நிறுவனத்தின் இந்தத் திட்டம் வெற்றிபெற்றால், இது மற்ற எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும். விரைவில் நம் வீட்டு சிலிண்டர்களும் ஸ்மார்ட்டாக மாறப்போகின்றன.

Share This Article

English summary

HPCL Smart LPG Cylinders: Real-Time Leak Alerts, Remote Notifications, and Safer Homes

விரைவில் ”Smart LPG Cylinder” அறிமுகம்: ஹெச்பி நிறுவனத்தின் ஸ்மார்ட் சிலிண்டரில் இத்தனை வசதிகளா? – HPCL is planning smart LPG cylinders with real-time leak detection and remote notifications, aiming to improve kitchen safety and give consumers faster alerts in case of gas leakage.

Story first published: Tuesday, July 21, 2026, 16:41 [IST]

Other articles published on Jul 21, 2026

Read More

Previous Post

மோடி வழியில் விஜய் ஆட்சி நடத்துகிறார்.. விமர்சனத்தை ஏற்கும் பக்குவம் இல்லை.. கனிமொழி கடும் தாக்கு | DMK MP Kanimozhi Slams Vijay Govt Over Markandeyan Arrest

Next Post

சிறுவர்களை இணையத்தில் பாதுகாக்க தளங்கள் அதிகப் பங்காற்ற வேண்டும் – Malaysiakini

Next Post

சிறுவர்களை இணையத்தில் பாதுகாக்க தளங்கள் அதிகப் பங்காற்ற வேண்டும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin