Last Updated:
வர்த்தக வரி விதிப்பு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்தும் என்று விமர்சித்துள்ள அதிபர் டிரம்ப், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அந்நாட்டின் நியூயார்க் நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், டிரம்பின் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்தது. எனினும் இது தொடர்பாக, அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் முறையீடு செய்ய அனுமதி வழங்கிய நீதிமன்றம், அதுவரை, வரி விதிப்பில் தங்கள் தீர்ப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்தது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், பல ஆண்டுகளாக விவேகமற்ற அரசியல்வாதிகளால் அமெரிக்காவிற்கு எதிராக வரி விதிப்புகள் பயன்படுத்தப்பட்டதாக சாடினார்.
புதிய வர்த்தக வரி விதிப்பை நீக்கினால் நாட்டிற்கு பேரழிவு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார். எனவே, நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும், இறுதியில் அமெரிக்கா வெல்லும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
August 30, 2025 9:51 PM IST
வரி விதிப்பு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு பேரழிவை ஏற்படுத்தும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சனம்