• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வரி குறைப்பு: இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி முறைக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் | GoM on rate rationalisation approves Centre’s two-rate GST proposal

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
வரி குறைப்பு: இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி முறைக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் | GoM on rate rationalisation approves Centre’s two-rate GST proposal
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மத்திய அரசு முன்மொழிந்துள்ள இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி முறையை ஏற்க மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த வெள்​ளிக்​கிழமை நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் உரை​யாற்​றிய பிரதமர் நரேந்​திர மோடி, நாட்டு மக்​களுக்கு நற்​செய்​தி​யாக தீபாவளிக்​குள் பொருட்​களுக்​கான ஜிஎஸ்டி வரி கணிச​மாக குறைக்​கப்​படும் என்ற அறி​விப்பை வெளி​யிட்​டார். அதாவது குறைந்த பட்​சம் 5 சதவீதம், அதி​கபட்​சம் 18 சதவீதம் கொண்ட இரு அடுக்​கு​களாக ஜிஎஸ்டி வரியை சீர்​திருத்​தம் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

தற்போது, ஜிஎஸ்டி வரி விகிதம் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்​கு​களாக உள்​ளது. இதில், 12 சதவீத வரி விதிப்​பில் உள்ள பொருட்​களை 5 சதவீதத்​தின் கீழ் கொண்டு வரவும், 28 சதவீத வரி விதிப்​பில் உள்ள 90 சதவீத பொருட்​களை 18 சதவீத வரி​வி​திப்​புக்​குள் கொண்​டு​வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பொருட்​களின் விலை குறைந்து சாமானிய மக்​களுக்கு நிதி சுமையி​லிருந்து விடு​தலை கிடைக்​கும்.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டம் தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலால் அமைக்கப்பட்ட மாநில அமைச்​சர்​கள் குழு ஆலோசனை மேற்கொண்டது. மாநில அமைச்சர்கள் குழுவின் தலைவரும் பிஹார் துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசின் புதிய திட்டத்தை ஏற்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய சாம்ராட் சவுத்ரி, “ஜிஎஸ்டி வரி வகிதத்தில் உள்ள 12 சதவீதம் மற்றும் 28 சதவீதத்தை நீக்குவது என்ற முன்மொழிவை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இது குறித்து நாங்கள் விவாதித்தோம். மத்திய அரசின் முன்மொழிவுக்கு எங்கள் ஆதரவை அளித்துள்ளோம். இதனை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நாங்கள் பரிந்துரைப்போம். ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவை எடுக்கும்” என தெரிவித்தார்.

எனினும், அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. செப்டம்பர் தொடக்கத்தில் கூட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும். ஜிஎஸ்டி கவுன்​சிலும் ஒப்​புதல் தரும்​பட்​சத்​தில் 2-அடுக்கு ஜிஎஸ்டி வரி​முறை நாடு முழு​வதும் அமலுக்கு வரும். இதன் மூலம், தீபாவளிக்கு முன்​ன​தாகவே பல்​வேறு பொருட்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.



Read More

Previous Post

பொய் வழக்குகளை தொடுத்த வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை : லக்னோ உயர்நீதிமன்றம் அதிரடி | இந்தியா

Next Post

ட்ரம்ப் அரசாங்கத்தின் 50% வரிக்கு ஜெய்சங்கர் பதிலடி பேச்சு

Next Post
ட்ரம்ப் அரசாங்கத்தின் 50% வரிக்கு ஜெய்சங்கர் பதிலடி பேச்சு

ட்ரம்ப் அரசாங்கத்தின் 50% வரிக்கு ஜெய்சங்கர் பதிலடி பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin