• Login
Sunday, February 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வரிகளை உயர்த்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்… இந்தியாவில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும்? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 22, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
வரிகளை உயர்த்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்… இந்தியாவில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும்? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 22, 2026 7:53 AM IST

இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு “Win-Win” சூழ்நிலைதான். ஏனெனில் டிரம்ப் வரிகளை உயர்த்தும் முன், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்தியப் பொருட்களின் மீதான சராசரி வரி வெறும் 2.5 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை மட்டுமே இருந்தது.

News18
News18

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு இந்தியப் பொருட்கள் மீது 50% வரை மிக உயர்ந்த வரிகளை விதித்திருந்தார். இதில் அடிப்படை வரி, பரஸ்பர வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்கான அபராத வரி ஆகியவை அடங்கும். பின்னர் நீண்ட இழுபறிக்கு பின்னர், இரு நாடுகளுக்கும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு, வரி விகிதம் 18 விழுக்காடாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை பயன்படுத்தி டிரம்ப், விதித்த வரிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடுப்பான டிரம்ப், ஏற்கெனவே உள்ள வரிகளோடு சீனா போன்ற நாடுகளுக்கு மேலும் 10 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்தார். இதை அறிந்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அமெரிக்க நாடாளுமன்றத்தை மீறி சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை பயன்படுத்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிவிதிப்பை ரத்து செய்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், தனது வரி விதிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உலக அரங்கில் தன்னை அவமானப்படுத்தியதாக குற்றஞ்சாட்டினார்.

காசா முனையை மறுகட்டமைப்பதற்காக அமைதி வாரியத்தை உருவாக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், அந்த வாரியத்தின் தொடக்க கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது.

மேலும் தனக்கு எதிராக தீர்ப்பளித்த 6 நீதிபதிகளை எண்ணி தான் வெட்கப்படுவதாகவும், 122வது சட்டப்பிரிவின் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய உலக நாடுகளுக்கு மேலும் 10 சதவீதம் வரி விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் 10 சதவீதம் வரியை 15 சதவீதமாக உயர்த்துவதாகவும் வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் எடுத்த முடிவு நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்டதாகவும், அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றம் வழங்கிய மோசமான தீர்ப்பை கவனத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு “Win-Win” சூழ்நிலைதான். ஏனெனில் டிரம்ப் வரிகளை உயர்த்தும் முன், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்தியப் பொருட்களின் மீதான சராசரி வரி வெறும் 2.5 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை மட்டுமே இருந்தது. பல அத்தியாவசியப் பொருட்கள் குறிப்பாக மருந்துகள், பூஜ்யம் வரியிலேயே ஏற்றுமதி செய்யப்பட்டன. வைரங்கள் மற்றும் தங்கம் போன்ற ஆபரணங்களுக்கு 2 சதவிகித வரி மட்டுமே வசூலிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் டிரம்பின் புதிய 10% வரி அறிவிப்பு ஆகியவற்றால் இந்திய மருந்துத்துறை, ஜவுளித்துறை ஆகியவை மிகப்பெரிய பலனை அடையும். கடந்த ஆண்டு நிலவிய 50 சதவிகித வரிச் சுமையோடு ஒப்பிடும்போது, இது ஒரு மறுமலர்ச்சி என்றே சொல்லலாம்.

பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப்

இந்திய ஜவுளித்துறைக்கு இதுவரை இருந்த மிகப்பெரிய சவால் சீனா மற்றும் வங்கதேசம் நாடுகள்தான். சீனா மீதான வரிகள் இன்னும் 40-50% என்ற அளவிலேயே தொடரும் என தெரிகிறது. இதேப்போல் வங்கதேசத்திற்கு வழங்கி வந்த வரிச்சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்க நிறுவனங்களான Walmart, Gap, Target போன்றவை சீனாவைத் தவிர்த்து, இந்தியாவிற்கு அதிக ஆர்டர் அளிக்கும்.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பட்டு ஆடைகள் மற்றும் சில குறிப்பிட்ட கைத்தறிப் பொருட்களுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் துணிகள் மற்றும் இந்தியக் கைத்தறிப் பொருட்களுக்கு அமெரிக்கச் சந்தையில் மவுசு கூடும். அடுத்த 150 நாட்களில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும் ஜவுளி ஆர்டர்கள் 25% முதல் 30% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர் ஆகிய தமிழ்நாட்டின் ஜவுளி உற்பத்தி மையங்களில் இருந்து கணிசமான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி அதிகரிக்கும். இந்த 15 சதவிகித வரி பிப்ரவரி 24 முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் இது 150 நாட்களுக்கு மட்டுமே செல்லும் தற்காலிக வரி. அதற்குள் டிரம்ப் மீண்டும், நாடாளுமன்றம் மூலமாக தனது 18 வரி ஒப்பந்தத்தைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்ட முயற்சிப்பார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

வரிகளை உயர்த்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்… இந்தியாவில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும்?

Read More

Previous Post

தெவுந்தர துப்பாக்கிச் சூடு: பொலிஸ் பாதுகாப்பு இருந்தபோதும் ‘டிலைட்’ சுட்டுக்கொலை – வெளியான புதிய தகவல்கள் – Sri Lanka Tamil News

Next Post

செராஸ், ஶ்ரீ மலாக்கா அடுக்குமாடி வாகன நிறுத்துமிட தகராறில் ஒருவருக்கு காயம் | Makkal Osai

Next Post
செராஸ், ஶ்ரீ மலாக்கா அடுக்குமாடி வாகன நிறுத்துமிட தகராறில் ஒருவருக்கு காயம் | Makkal Osai

செராஸ், ஶ்ரீ மலாக்கா அடுக்குமாடி வாகன நிறுத்துமிட தகராறில் ஒருவருக்கு காயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin