மாநாட்டு அமைப்பாளர்கள்
மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் பேராசிரியர் S. ஆரோக்கியராஜ், PhD அவர்கள் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். கவிஞர் சகாய டர்சியூஸ் பீ துணைத் தலைவராகவும், முனைவர் D. ஞானராஜ் செயலாளராகவும், திருமதி சாந்தி பிரின்ஸ் மக்கள் தொடர்பு பொறுப்பாளராகவும் பணியாற்றினர்.
சேஜோங் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரசேகரன், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ச. திருநாவுக்கரசு, முனைவர் ஜான்சி ராணி ஆகியோர் அறிவியல் குழு உறுப்பினர்களாக பணியாற்றினர்.
அருட் தந்தை இன்பராஜ் மைகேல், நோரா, மருத்துவர் மோசஸ் லீ (International Forum), மருத்துவர் மரியா, பேராசிரியர் பாலமுரளிகிருஷ்ணன், பேராசிரியர் ரவீந்திரன், ஆரோக்கியராஜ் சாருமதி, முனைவர் விக்கினேஷ்ராம்-சுமித்ரா, ஹேமநாதன், ஸ்வாமிராஜன், பிரான்சிஸ் ஜெவெல்சன், விபின் ஜியோ, ருவன் ஸ்ரீநாத், முனைவர் மகேந்திரன், ஆனந்த், துரை, ஆதனூர் சோழன், ஜெரின்ராஜ் ஜோசப், பிரான் யோகேஷ் மற்றும் மாலத்தீவு கலையரசன் லோகநாதன் ஆகியோர் மாநாட்டு சிறப்பு குழுவினராக செயல்பட்டனர்.
எதிர்கால திட்டங்கள்
இந்த மாநாட்டின் வெற்றியை அடுத்து, தென்கொரியாவில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் பரவலுக்கான பல நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்-கொரிய கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்கள், தமிழ் மொழி வகுப்புகள் மற்றும் பயிற்சி திட்டங்கள், திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கிய ஆய்வுகள், தமிழ்-கொரிய மொழி ஒப்பீட்டு ஆய்வுகள், ஆண்டுதோறும் தமிழ் மற்றும் வணிக மாநாடுகள் ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.
தென்கொரியாவில் நடைபெற்ற முதல் சர்வதேச தமிழ் மாநாட்டிற்கு பேராசிரியர் ஆரோக்கியராஜ் முன்னோடி
தென்கொரியாவில் நடைபெற்ற முதல் சர்வதேச தமிழ் மாநாடு, தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி சங்கம் (SKTRA) தலைவர் மற்றும் செஜோங் பல்கலைக்கழகத்தின் உயிர்தொழில்நுட்பத் துறை பேராசிரியருமான பேராசிரியர் ஆரோக்கியராஜ் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் முன்னெடுப்பின் பயனாக உருவானதாகும். பேராசிரியர் ஆரோக்கியராஜ் அவர்கள், ஒரு சிறந்த உயிர்தொழில்நுட்ப அறிஞராக மட்டுமல்லாது, தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட தமிழறிஞராகவும் திகழ்கிறார்.
இந்திய–கொரியா பண்பாட்டு மற்றும் மொழியியல் உறவுகளை வலுப்படுத்த, அவர் நீண்ட காலமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தென்கொரியாவில் கல்வி, அறிவியல் மற்றும் தமிழ் மொழித் தொண்டாற்றி வரும் ஆராய்ச்சியாளர் முனைவர் ஆரோக்கியராஜ் அவர்களின் தொடர்ச்சியான மற்றும் சிறப்பான பங்களிப்புகளை பாராட்டி, “கணியன் பூங்குன்றன் விருது” மற்றும் “மொழியியல் விருது” தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

