Last Updated:
மழையில் நனைந்துவிடாமல் இருக்க பாதுகாப்பான இடங்களை தேடி மக்கள் ஓடியபோது, சுற்றுலாப்பணிகளிடையே தள்ளுமுள்ளு எற்பட்டது.
ஹைதி நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.
ஹைதியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள லாஃபெரியர் சிட்டாடல் (Laferriere Citadel) கோட்டை யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கோட்டையின் வருடாந்திர கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான மாணவர்களும், சுற்றுலாப் பயணிகளும் அங்கு திரண்டிருந்தனர்.
ஹைதியில் கூட்ட நெரிசல்
அப்போது அங்கு திடீரென கனமழை பெய்தது. இதனால் அங்கிருந்தவர்கள் மழையில் நனைந்துவிடாமல் இருக்க பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினர். அப்போது சுற்றுலாப் பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்டநெரிசலாக மாறியது. இந்த நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


