கேரளாவில் 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள், 14 மாவட்ட ஊராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 941 கிராம ஊராட்சிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்டமாக, கடந்த 9 ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கிய ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் 71 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
இதனை தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் 75 சதவிகதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், 14 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட உள்ள 244 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும், ஆளும் இடதுசாரிகள் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மாநகராட்சியில் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும், இடதுசாரிகள் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
நகராட்சியை பொறுத்தவரை, காங்கிரஸ் கூட்டணி 54 இடங்களிலும், ஆளும் கம்யூனிஸ்ட் 29 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
December 13, 2025 12:30 PM IST

