01
2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.185 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,745-க்கும், சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.69,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.155 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,245-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,240 உயர்ந்து, ரூ.57,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி வருகிறது.


