• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வரலாறு காணாத புதிய உச்சம்: கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்குகிறது – தங்கம் ஒரு பவுன் ரூ.77 ஆயிரத்தை தாண்டியது | gold price reaches new high gram nears rupees 10 thousand

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
வரலாறு காணாத புதிய உச்சம்: கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்குகிறது – தங்கம் ஒரு பவுன் ரூ.77 ஆயிரத்தை தாண்டியது | gold price reaches new high gram nears rupees 10 thousand
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் ஒரே நாளில் ரூ.680 அதிகரித்து, தங்கம் பவுன் விலை முதல்​முறை​யாக ரூ.77 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டுள்​ளது. இது நகை வாங்​கு​வோர் மத்​தி​யில் மிகுந்த அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு உள்​ளிட்​டவை காரண​மாக தங்​கம் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு சரிந்து வரு​வ​தால், பங்கு சந்​தை​யில் முதலீடு செய்​துள்​ளவர்​கள் தங்​கத்​தில் முதலீடு செய்து வரு​கின்​றனர். இதனால், பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வரு​வதுடன், தங்​கத்​தில் முதலீடும் அதி​கரித்து வரு​கிறது. இதன் காரண​மாக, தங்​கத்​தின் விலை​யும் அதி​கரித்து கொண்டே வரு​கிறது.

கடந்த ஜனவரி மாத தொடக்​கத்​தில் ஒரு பவுன் தங்​கம் ரூ.58 ஆயிர​மாக இருந்​தது. பின்​னர், போர் பதற்​றம் உள்​ளிட்ட காரணங்​களால் தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஆக.8-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.75,760 என்ற உச்​சத்தை அடைந்​தது.

பின்​னர், ஏற்ற, இறக்​க​மாக இருந்த நிலை​யில், தங்​கத்​தின் விலை கடந்த ஆக.25-ம் தேதி முதல் தொடர்ச்​சி​யாக உயர்ந்து கொண்டே வரு​கிறது. அதன்​படி, வரலாற்​றில் முதல்​முறை​யாக ஆக.29-ம் தேதி தங்​கம் பவுன் விலை ரூ.76 ஆயிரத்தை கடந்து நகை வாங்​கு​வோரை அதிர்ச்​சிக்​குள்​ளாக்​கியது.

இதன் தொடர்ச்​சி​யாக, 2 நாட்​கள் ரூ.76,960-ல் நின்று கொண்​டிருந்த தங்​கம் விலை நேற்று மீண்​டும் அதி​கரித்து பவுன் ரூ.77 ஆயிரத்தை முதல்​முறை​யாக எட்​டியது. அதன்​படி, நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 அதி​கரித்​து, ரூ.77,640-க்​கும், கிரா​முக்கு ரூ.85 அதி​கரித்து ரூ.9,705-க்​கும் விற்​பனை​யானது. 24 காரட் சுத்த தங்​கம் ரூ.84,696-க்கு விற்​கப்​பட்​டது. கடந்த ஆக.27-ம் தேதி பவுன் ரூ.75,120-க்கு விற்​கப்​பட்ட நிலை​யில், கடந்த 5 நாட்​களில் மட்​டும் ரூ.2,520 உயர்ந்​துள்​ளது.

இப்​படி தங்​கம் விலை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​வது நகை வாங்​கு​வோர் மத்​தி​யில் மிகுந்த கவலையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதற்​கிடையே, வெள்​ளி​யும் கிரா​முக்கு ரூ.2 உயர்ந்​து, ரூ.136-க்​கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,000 உயர்ந்​து, ரூ.1.36 லட்​சத்​துக்​கும் விற்​கப்​பட்​டது. இந்​தி​யா​வில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி காரண​மாக, இது​வரை இல்​லாத வகை​யில் அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு சரிந்​துள்​ளதே தங்​கம்​ விலை உயர்​வுக்​கு முக்​கிய காரண​மாக பார்க்​கப்​படுகிறது.



Read More

Previous Post

அரசு மாளிகையை காலி செய்தாா் தன்கா்

Next Post

திருட்டு பைக் வழக்கில் 9,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாக 5 போலீசார் கைது | Makkal Osai

Next Post
திருட்டு பைக் வழக்கில் 9,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாக 5 போலீசார் கைது | Makkal Osai

திருட்டு பைக் வழக்கில் 9,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாக 5 போலீசார் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin