ஐக்கிய அரபு நாடுகளில் வரலாறு காணாத மழை காரணமாக தற்போது வரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலைவன பகுதியான வளைகுடா நாடுகளில் மழை பொழிவது ஆச்சரியமான ஒன்று. செயற்கை முறையிலேயே அங்கு பெரும்பாலும் மழை பொழிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் அங்கு வரலாறு காணாத வகையில் மழை பொழிந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் வரலாறு காணாத வகையில் மழை பொழிந்து வருகிறது. வருடம் முழுவதும் பொழிய வேண்டிய ஒரே நாளில் பெய்துள்ளது.
இதனால் முக்கிய நகரமான துபாயும் மழை வெள்ளத்தில் மிதக்கிறது. துபாயின் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
Dubai Airport right now
pic.twitter.com/FX992PQvAU— Science girl (@gunsnrosesgirl3) April 16, 2024
ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலைகள் முழுவதும் நீரால் மூழ்கியுள்ளன. சாலைகளில் முட்டியளவு நீர் தேங்கியுள்ளன. இதனால் அங்குள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளும் தங்களின் வீடுகளில் இருந்தே பணிபுரியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே கனமழை பெய்திருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதுடன் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது. ஓமன் நாட்டிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தற்போது வரை 18 பேர் உயிரிழந்திருப்பதாக ஓமன் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
