வரலட்சுமி சரத்குமார் கடந்த 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக ‘போடா போடி’ படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனார்.
இந்நிலையில் வரலட்சுமி சரத்குமாருக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடித்துள்ளது.
முன்னணி நடிகராக திகழ்ந்த சரத்குமார் மகளான வரலட்சுமி தொடர்ச்சியாக கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லி, குணச்சித்திர கதாபாத்திரம் என தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கிறார்.
கதாநாயகியாக நடித்து வந்த காலக்கட்டத்திலே விமர்சனங்களுக்கு அஞ்சாமல் வில்லியாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டார் வரலட்சுமி சரத்குமார்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சந்தோஷமாக 100% ஈடுபாட்டோடு நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் திடீரென ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார். அதாவது நேற்றைய தினம் குடும்பத்தினர் மத்தியில் வருவுக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
மும்பையை சார்ந்த தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ், வரு இருவருக்கும் நேற்றைய தினம் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
விரைவிலே இவர்கள் திருமணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதமாக வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது பலருக்கும் இன்பதிர்ச்சியை அளித்துள்ளது.
மேலும், வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வர்ற, ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

