திண்டுக்கல் மாவட்டம் காந்தி மார்க்கெட்டில் சில நாட்களாகவே காய்கறிகளின் வரத்துக் குறைந்துள்ளதால் காய்கறிகள் விலை உயர்ந்து காணப்பட்டன. பீன்ஸ், கேரட், தக்காளி, முட்டைக்கோஸ், மிளகாய் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில் தற்போது முருங்கைக்காயின் விலையும் ஏற்றம் அடைந்து ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.160 முதல் ரூ.210 விற்பனையாகிறது. பருவநிலை மாற்றத்தால் மழையுடன் சேர்ந்து பலத்த காற்றும் வீசியதால் அதிகளவில் முருங்கைப்பூ சேதம் அடைந்தது. இதனால் தற்போது முருக்கைக்காய் சாகுபடி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வியாபாரி ஜான் ஆல்பர்ட் கூறுகையில், “கடந்த ஒரு மாத காலமாகக் காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்த காணப்படுகின்றது. வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தக்காளி ஒரு கிலோ ரூ.80 ஆகவும், பீன்ஸ் ரூ.150 ஆகவும், பட்டர் பீன்ஸ் ரூ.300 வரையும் விற்பனையாகின்றது.
இதையும் படிங்க: ஊட்டியில் புகழ்பெற்ற டீ… தேயிலை தொழிற்சாலைக்கு விசிட் அடிக்க டூரிஸ்ட்கள் ஆர்வம்…
பட்டாணி ரூ.350 வரை விற்பனையாகின்றது. நாட்டுக் காய்கறி ரகங்களான கத்திரிக்காய், வெண்டைக்காய் கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையாகின்றது. இதில் தற்போது முருங்கைக்காயின் விலை உயர்ந்து கிலோ ரூ.160 முதல் ரூ.210 வரை விற்பனையாகின்றது. இந்த விலை உயர்வால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தாலும் வரத்துக் குறைவால் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு இல்லாமல் உள்ளது சற்று வேதனை அளிக்கின்றது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)