Last Updated:
1986-ஆம் ஆண்டு பிஜோய் இமானுவேல் வழக்கில், தேசிய கீதத்தை அவமதிக்காமல், மரியாதையுடன் நின்றாலே போதும், அதை கட்டாயமாகப் பாட வேண்டும் என்று வற்புறுத்த முடியாது என கூறப்பட்டிருந்தது.
வந்தே மாதரம் பாடலை பாட மறுப்பவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என எதிர்பார்ப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வந்தே மாதரத்தின் 6 சரணங்களையும் அரசு நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு மற்றும் 2026-ம் ஆண்டு சட்டத் திருத்தத்தை எதிர்த்து, கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், வந்தே மாதரத்தில் இடம்பெற்றுள்ள 4 சரணங்களில் இந்து தெய்வங்கள் குறித்த குறிப்புகள் இருப்பதால், அவற்றை கட்டாயமாகப் பாடுவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சுதந்திரப் போராட்டத்தில் தேசிய பாடலின் பங்கை மறந்து இந்த சட்டத்தை எதிர்ப்பது “நக்சலைட் மனப்பான்மை” என்றார்.
1986-ஆம் ஆண்டு பிஜோய் இமானுவேல் வழக்கில், தேசிய கீதத்தை அவமதிக்காமல், மரியாதையுடன் நின்றாலே போதும், அதை கட்டாயமாகப் பாட வேண்டும் என்று வற்புறுத்த முடியாது என கூறப்பட்டிருந்தது.
அந்த தீர்ப்பு தொடர்ந்து பொருந்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மத நம்பிக்கை அல்லது மனசாட்சியின் அடிப்படையில் தேசிய பாடலை பாட மறுப்பவர்களுக்கு குற்றவியல் தண்டனை விதிக்கப்படக் கூடாது என நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக நீதிபதி ஜாய்மால்யா பாக்சி தெரிவித்தார்.இந்த சட்டத் திருத்தத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்து மத்திய அரசு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது..


