Last Updated:
வந்தே மாதரம் 150வது ஆண்டு விழாவில் நரேந்திர மோடி டெல்லியில் சிறப்பு தபால் தலை நாணயத்தை வெளியிட்டு, இந்தியா பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் முன்னணி நாடு எனக் கூறினார்.
ஒற்றுமையின் மந்திரமாகவும் தலைமுறைகள் தாண்டிய ஊத்வேகம் அளிக்கும் மந்திரமாகவும் வந்தே மாதரம் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாடு, நமது தாய், நாம் அதன் பிள்ளைகள் என்று வேதம் கற்றுத் தருவதாக கூறினார். மேலும், இந்தியாவில் மட்டுமே பாரத மாதா தன் பிள்ளைகளை உருவாக்குபவராகவும் அதே பிள்ளைகளுக்கு பிரச்சினை எனும்போது அழிக்கும் சக்தியாகவும் மாறுவதாக பிரதமர் கூறினார்.
மேலும் தேசத்தை பெண்களுடன் ஒப்பிடுவதன் மூலம் இந்தியா பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் முன்னணியில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
Delhi,Delhi,Delhi
November 07, 2025 4:23 PM IST


