Last Updated:
Vande Bharat Express: ஏசி காற்று வெளியாகும் மேற்கூரைப் பகுதியில் இருந்து அருவி போல தண்ணீர் கொட்டியுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வாரணாசியில் இருந்து டெல்லி சென்ற வந்தே பாரத் ரயிலின் மேற்கூரையில் இருந்து நீர் கொட்டியதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
பயணிகள் சொகுசு வசதிகளை மேற்கொள்ளும் வகையில், வந்தே பாரத் ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து டெல்லியை நோக்கி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் ஓடிக் கொண்டிருந்தபோது, அதன் ஏசி காற்று நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஏசி காற்று வெளியாகும் மேற்கூரைப் பகுதியில் இருந்து அருவி போல தண்ணீர் கொட்டியுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள தர்ஷில் மிஷ்ரா என்பவர், பல முறை புகார் அளித்தும் ரயில்வே ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் ரயில்வே துறை கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
June 25, 2025 7:37 AM IST


