Last Updated:
அம்பே மாதா எனப்படும் துர்கை அம்மனுக்கான பூஜைகள், கனேஷ பூஜை, ஹனுமன் பூஜை, சிவ அபிஷேகம் போன்ற பூஜைகளிலும் மெஸ்ஸி கலந்து கொண்டு, மெய்மறந்து அவற்றில் பங்கெடுத்தார்.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி, தனது GOAT டூர் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் பல பகுதிகளுக்கு 3 நாட்கள் பயணித்தார். இதனொரு பகுதியாக அவர் குஜராத் ஜாம்நகரிலுள்ள ஆனந்த் அம்பானியின் வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை டிசம்பர் 15ஆம் தேதியன்று பார்வையிட்டார்.
வந்தாராவின் வனவிலங்குகள் மறுவாழ்வு மையமானது, உயர்தர கால்நடை சேவைகளை வழங்கும் நோக்கத்தில் செயல்படும் மையமாகும். அங்கு வருகை தந்த மெஸ்ஸிக்கு இந்து முறைப்படியான சடங்குகள் செய்யப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மிகுந்த மரியாதையோடு அவற்றை ஏற்றுக்கொண்டார் மெஸ்ஸி. தொடர்ந்து வனவிலங்குகளுடன் நேரம் செலவிட்ட அவர், விலங்கு பாதுகாப்பு குழுவினரிடம் கலந்துரையாடல் நடத்தினார். இவற்றைத் தொடர்ந்து மெஸ்ஸி மற்றும் அவருடன் இந்தியா வந்த அவரது இண்டர் மியாமி அணியினரான லூயிஸ் ஸ்வரேஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோருக்கு பாரம்பரிய நாட்டுப்புற இசை இசைக்கப்பட்டும், பூ மழை தூவப்பட்டும், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டும், ஆரத்தி எடுக்கப்பட்டும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் அம்பே மாதா எனப்படும் துர்கை அம்மனுக்கான பூஜைகள், கணேஷ் பூஜை, ஹனுமன் பூஜை, சிவ அபிஷேகம் போன்ற பூஜைகளிலும் மெஸ்ஸி கலந்து கொண்டு, மெய்மறந்து அவற்றில் பங்கெடுத்தார். சமாதானம் மற்றும் உலக ஒற்றுமைக்காக பிரார்த்தனை செய்வதற்காக அவர் இந்த பூஜைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பூஜைகளின் போது அவர் “ஜெய் மாதா” மற்றும் “ஹர் ஹர் மகாதேவ்” போன்ற மந்திரங்களை உச்சரித்த காணொளிகளும் வெளியாகி வைரலாகியுள்ளன.
#WATCH | Global football icon Lionel Messi had a guided tour of Vantara’s expansive conservation ecosystem, home to rescued big cats, elephants, herbivores, reptiles and fostered young animals from across the globe. pic.twitter.com/i3Y8j0ZxeX
— ANI (@ANI) December 17, 2025
தொடர்ந்து சிங்கம், யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள், காண்டாமிருகங்கள் போன்ற விலங்குகளின் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களை மெஸ்ஸி பார்வையிட்டார். விலங்குகளைப் பார்வையிட்ட மெஸ்ஸி அவற்றுக்கு உணவுகளும் அளித்தார். லியோனல் மெஸ்ஸியைச் சிறப்பிக்கும் விதமாக இம்மையத்தில் உள்ள குட்டி சிங்கம் ஒன்றுக்கு, லியோனல் என பெயர் சூட்டப்பட்டது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை (டிச. 13) இந்தியா வந்த மெஸ்ஸி, கொல்கத்தாவிலுள்ள லேக் டவுனில் அமைக்கப்பட்டுள்ள தனது 70 அடி உயர சிலையை நட்சத்திர விடுதியில் இருந்தப்படியே மெஸ்ஸி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மற்றும் அவரது இளைய மகன் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஞாயிறன்று மும்பை சென்ற மெஸ்ஸி, திங்களன்று டெல்லி சென்றுவிட்டு குஜராத்தின் வந்தாராவிற்கு சென்றார்.

இதில் சனிக்கிழமையன்று மாலை, ஹைதராபாத் சென்றிருந்த மெஸ்ஸி அங்கு முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுத் திடலில் சில நிமிடங்கள் செலவிட்டார். அங்கே மெஸ்ஸி சில நிமிடங்கள் கால்பந்து விளையாடிய நிலையில், தொடர்ந்து ராகுல் காந்தியை சந்தித்தார். இதையடுத்து மெஸ்ஸி டெல்லிக்கு சென்றடைந்தார்.
தொடர்ந்து மறுதினம் (ஞாயிறு) மும்பை சென்ற மெஸ்ஸி, வான்கடே ஸ்டேடியம் சென்றார். முன்னதாக அவர் கிரிக்கெட் க்ளப்பில் சச்சின், ஷாகித் கபூர் உட்பட பல பிரபலங்களை சந்தித்தார். மும்பை ரசிகர்கள் ரயில்கள், பேனர், ஜெர்சிக்கள் என அனைத்திலும் மெஸ்ஸியின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டாடினர்.
December 18, 2025 10:21 AM IST


