• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வண. கரகொட உயங்கோட மைத்ரி மூர்த்தி தேரரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார் ஜனாதிபதி

GenevaTimes by GenevaTimes
June 27, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
வண. கரகொட உயங்கோட மைத்ரி மூர்த்தி தேரரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார் ஜனாதிபதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


18

– இலங்கை தற்போது அடைந்துகொண்டுள்ள பொருளாதார, நிதி முன்னேற்றங்கள் தொடர்பிலும் தேரரிடம் எடுத்துரைப்பு

– பாடசாலை கல்வி நேரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடட இனி அனுமதிக்கப் போவதில்லை

பலாங்கொட ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவெனாவுக்கு இன்று (27) விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீ அமரபுர மகாசங்க சபைத் தலைவரும் ஸ்ரீலங்கா அமரபுர பீட ராஸ்ஸகல தரப்பு மகாநாயக்க தேரர் வண. கரகொட உயங்கோட மைத்ரி மூர்த்தி தேரரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இலங்கை அடைந்துள்ள பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றம் தொடர்பில் மகாநாயக்க தேரருக்குத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவரோடு சிறிது நேரம் கலந்தாலோசித்தார்.

ஸ்ரீ தம்மானந்த பிரிவெனாவின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக சப்ரகமுவ மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாவுக்கான காசோலையையும் ஜனாதிபதி இதன்போது கையளித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“இன்று, தேரவாத பௌத்தத்துக்கு உலகம் முழுவதும் அதிக கேள்வி உள்ளது. அநுராதபுரத்தை மையமாகக் கொண்டு தேரவாத பௌத்தம் தொடர்பான ஆய்வு மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, உள்நாடு வெளிநாடுகளில் இருந்து தேரவாத பௌத்தத்தில் ஆர்வமுள்ள அனைவருக்கும் வந்து இந்த மையத்தில் கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பௌத்த மத போதனைகளை ஆய்வு செய்யும் நிறுவனம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதனால் மகாயான பௌத்தத்தை மேலும் கற்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. அத்தகைய பௌத்த கல்வி நிலையம் ஒன்றையும் உருவாக்க வேண்டும்.

மேலும் தேரர்களின் ஒழுக்கம் குறித்து எழுந்துள்ள பிரச்சனைகளை அந்தந்த பீடத்தினரே தீர்க்க வேண்டும். பீடங்களின் சபைக்கு அதற்கான அதிகாரம் உள்ளது. ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுள்ள பிக்குகளின் ஒழுக்கம் தொடர்பில்கூட சம்பந்தப்பட்ட தரப்பினர் தீர்மானங்களை எடுக்க முடியும். கத்தோலிக்க திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலை பாதிரியார்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படுவதில்லை.

இந் நாட்களில் ஆசிரியர் சங்கங்களின் நடவடிக்கைகளால் ஆசிரியர் பணியின் மரியாதை கேள்விக்குரியாகிறது. கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலுக்கு மத்தியில் பாதுகாப்பு தரப்பினரின் தடைகளை தகர்த்துச் செல்லும் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியாது. எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட இடமளிக்கபோவதில்லை. அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம்.

இந்நிகழ்வில், அமைச்சர் மனுஷ நாணயக்கார, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சட்டவாதி நவீன் திசாநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.



Read More

Previous Post

சீனாவில் தொடர்ந்து சரிவைக் கண்டுள்ள டொயோட்டா!!

Next Post

கட்டணங்களை உயர்த்தியது ஜியோ!

Next Post
கட்டணங்களை உயர்த்தியது ஜியோ!

கட்டணங்களை உயர்த்தியது ஜியோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin