பாலிக் பூலாவ்:
கடந்த ஜூன் 27 பாயான் பாரு, லெங்காக் மாயாங் பாசீரில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் கழிப்பறையில் பெண்களின் அந்தரங்க உறுப்புக்களை படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்ததாக தொழிற்சாலை பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
27 வயதான அந்த இளைஞனின் அநாகரீகமான செயல்களை பாதுகாப்புக் காவலர்கள் கண்டறிந்ததை அடுத்து, அவர் இரவு 10.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார் என்று தென்மேற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் கமாருல் ரிசல் ஜெனால் கூறினார்.
“சந்தேக நபர் முதல் மாடியில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குள் பலமுறை நுழைந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் ஜூன் 26 அன்றும் கழிவறைக்குள் நுழைந்தது கண்டறியப்பட்டது. அவரது கைத்தொலைபேசியை ஆய்வு செய்ததில் பெண்களின் நிர்வாணமான பல படங்கள் இருந்தது தெரியவந்தது. அத்தோடு கழிவறையில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் பிற ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருணஹன என்றும், அந்த நபர் தனது சொந்த பார்வைக்காக படங்களையும் வீடியோக்களையும் எடுத்ததாகக் கூறினார்,” என்றும் கமாருல் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 292 (a) மற்றும் சிறு குற்றச் சட்டம் 1955 இன் பிரிவு 14 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் ஜூலை 8 வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.


