வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க தாமாக முன்வர வேண்டும் என்று வணிகர்கள் நலவாரிய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
நாட்டிலேயே முதல் முறையாக வணிகர்கள் நலனுக்காக தமிழ்நாட்டில் வணிகர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த வாரியத்தின் முதல் கூட்டம் தலைமைச் செலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” இந்த வாரியத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உருவாக்கினார். தற்போது, இந்த வாரியத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 88,210 ஆக உயர்ந்துள்ளது.
திமுக அரசு அமைந்த பின்னர் வாரியம் மூலம் நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப நல நிதியும் உயர்த்தப்பட்டு 390 பேர் குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உள்ளாட்சி அமைப்பளால் கடைகளுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் உரிமங்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் 9 ஆண்டுகள் இருந்ததை 12 ஆண்டுகள் என விதிகள் திருட்டப்பட்டுள்ளது. வணிகர்கள் தாங்களாகவே தமிழில் பெயர் பலகைகளை மாற்ற முன்வர வேண்டும். மிகப்பெரிய தொழிற்காலைகள் மட்டுமின்றி, சிறு கடைகளும், வியாபாரிகளும் தங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் அரசு அக்கறை கொண்டுள்ளதாக கூறினார்.
உங்கள் வணிகத்திற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதுதான் அரசின் கொள்கை. உங்களது கோரிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் எங்களை சந்தித்து சொல்லலாம். நமக்கிடையில் இடைத்தரகர்கள் இல்லை. இருக்கவும் கூடாது.
இதை மனதில் வைத்து வர்த்தகமாக இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
