Last Updated:
Commercial Gas Cylinder Shortage | சாதாரண ஓட்டல்களில் 30 ரூபாய்க்கு விற்ற பூரி, பொங்கல் ஆகியவை 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியில் டீ விலை 20 ரூபாயாகவும், காபி விலை 30 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய போர் காரணமாக, உலகம் முழுவதும் எரிபொருள் விநியோக சங்கிலி தடைபட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில், வணிக சிலிண்டர் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதனால், புதுச்சேரியில் பல சிறிய உணவகங்கள் மூடப்பட்ட நிலையில், திறந்திருக்கும் கடைகளிலும் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சாதாரண ஓட்டல்களில் 30 ரூபாய்க்கு விற்ற பூரி, பொங்கல் ஆகியவை 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல இட்லி, வடை ரூ.6ல் இருந்து ரூ.10க்கும், பரோட்டா ரூ.15ல் இருந்து ரூ.20, ரூ.25 வரையிலும்,20 ரூபாய் சப்பாத்தி 30 ரூபாய், பிரியாணி சராசரியாக ரூ.100, சாப்பாடு ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பெரிய ஓட்டல்களில் குறிப்பிட்ட உணவுகள் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கின்றனர். முதலிலேயே முழுமையாக ஆர்டர் கொடுக்க வேண்டும். கியாஸ் அடிக்கடி உபயோகப்படுத்த முடியாது என்பதால் ஒரே கட்டமாக சமைத்து எடுத்து வருவோம் என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் உணவுப் பொருட்களைத் தொடர்ந்து, டீ, காபி விலையையும் உயர்த்தப்போவதாக டீக்கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
12, 15 ரூபாய் என விற்கப்பட்ட டீ 20 ரூபாயாகவும், 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட காபி 30 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு செவ்வாய்க்கிழமை அமலுக்கு வருகிறது.
Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry)
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: நாளை முதல் டீ ரூ.20… காபி ரூ.30… புதுச்சேரி மக்களுக்கு ஷாக் கொடுத்த கடைகள்!


