Last Updated:
ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக, வணிக சிலிண்டர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல், தமிழகத்தில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு கடுமையாகியுள்ளதால், பல உணவக உரிமையாளர்கள் மீண்டும் கொரோனா காலத்தைப் போன்ற சூழ்நிலை உருவாகும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதன் வகையில் திருமண மண்டபங்களிலும் இதன் தாக்கம் உள்ளது. என்னவென்றால் இந்த வணிக சிலிண்டர் பற்றாக்குறையின் காரணமாக, திருமண மண்டபங்களில் பதிவாகி இருந்த சுப நிகழ்வுகள் ரத்தாகி வருவதாக மண்டப உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக திருமண மஹாலில் நடைபெறும் சுப நிகழ்வுகளில் வணிக சிலிண்டர்களின் பயன்பாடு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்தது. எனவே வணிக சிலிண்டர்களின் தட்டுப்பாடு எதிரொலியின் காரணமாக, திருமண மண்டபங்களில் பதிவு செய்திருந்த திருமண நிகழ்வுகள் தற்போது ரத்தாகி வருவதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
திருமண மண்டப உரிமையாளர்கள் தெரிவிக்கையில், ஈரான் – இஸ்ரேல் கடும் போர் காரணமாக வணிக ரீதியாக நாம் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். இந்த வணிக சிலிண்டர்களின் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் சுப முகூர்த்த நாட்களில் நடைபெறவிருந்த இரண்டு திருமண முன்பதிவுகள் தற்போது ரத்தாகி இருக்கின்றது. காரணம் என்னவென்றால், வணிக சிலிண்டர்களின் பற்றாக்குறையின் காரணமாக திருமண நிகழ்விற்கு வருகை தருபவர்களுக்கு உணவு போதிய நேரத்தில் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் திருமண வீட்டார் சுப நிகழ்வுகளை ரத்து செய்து வருவதாகவும் தெரிவித்தார். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும், இதற்கு மத்திய அரசு விரைந்து இதற்கான தீர்வு காண வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.
Mar 11, 2026 12:06 PM IST

