வட இந்தியாவில் மழை தொடர்பான சம்பவங்களில் 7 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி-என்.சி.ஆர் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை புழுதிப் புயலுடன் மூன்று மணி நேரம் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால், குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் மதுராவின் பரபரப்பான சாலைகள் தண்ணீரில் மூழ்கின. மழை நீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று காரணமாக தில்லி விமான நிலையத்தில் மூன்று விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

