• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வட்டுக்கோட்டை காவல்துறையினர் அடாவடி : ஜனாதிபதிக்கு பறந்த அறிக்கை

GenevaTimes by GenevaTimes
April 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வட்டுக்கோட்டை காவல்துறையினர் அடாவடி : ஜனாதிபதிக்கு பறந்த அறிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்குமாறு சமூக
செயற்பாட்டாளரான ந.பொன்ராசா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை
விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் அவர்
முறைப்பாடளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “2005.04.04 அன்று பிற்பகல் அலுவலக பணி முடித்து பால்மா பேணி ஒன்றையும்
வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றேன்.

சாரதி அனுமதிப்பத்திரம் 

இதன்போது மாலை 6.50 மணியளவில் மூளாய்
காளி கோயிலுக்கு சமீபமாக வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றும் இரு காவல்துறையினர் நின்றனர். (அவர்களின் சீருடை இலக்கம் 70853, 84310) (அவர்களின்
மோட்டார் சைக்கிள் இலக்கம் 2794).

நான் இடதுபுறமாக சென்று கொண்டிருந்த போது
அவர்கள் வலது பக்கத்தில் ஒரு இளைஞனை மறித்து வைத்து கதைத்துக்கொண்டு நின்றனர்.

வட்டுக்கோட்டை காவல்துறையினர் அடாவடி : ஜனாதிபதிக்கு பறந்த அறிக்கை | People Report Vaddukottai Police To President

என்னைக் கண்டதும் இடது பக்கம் வந்த காவல்துறையினர் என்னை மறித்து எங்கே
போகின்றீர்கள்? எங்கிருந்து வருகின்றீர்கள்? என்ன வேலை செய்கிறீர்கள்? என
விசாரித்துவிட்டு சாரதி அனுமதிப்பத்திரம் காப்புறுதிப் பத்திரம் போன்றவற்றை
என்னிடம் இருந்து வாங்கினர்.

ஏன் விசாரிக்கிறீர்கள் எனக் கேட்டேன், இதன்போது ஒரு காவல்துறை அதிகாரி தனது இடது கையை நீட்டி உள்ளங்கையில் ஊதுமாறு
பணித்தார்.

காவல் நிலையம்

சாராயம் குடித்திருக்கிறாய் சோதிக்க வேண்டும் என்றனர், எங்கே
பார்ட்டிக்கு போய் வருகின்றாய் எனக் கேட்டனர்.

கையில் ஊதினால் எப்படி சோதிக்க
முடியும்? பலூனில் தானே சோதிப்பது எனக் கேட்டேன், நான் திருப்பி கதைத்தவுடன்
எனது மோட்டார் சைக்கிளைப் பூட்டி திறப்பை எடுத்துக்கொண்டனர்.

வட்டுக்கோட்டை காவல்துறையினர் அடாவடி : ஜனாதிபதிக்கு பறந்த அறிக்கை | People Report Vaddukottai Police To President

என்னை காவல் நிலையம் கொண்டு செல்லப்போவதாக அச்சுறுத்தி அடிக்க முற்பட்டனர்.

தமது
மோட்டார் சைக்கிளை இயக்கி என்னை இடிப்பதற்கு முற்பட்டனர், எனது மோட்டார்
சைக்கிளை காவல் நிலையம் கொண்டு செல்லப்போவதாகவும் என்னை இறங்குமாறும்
அச்சுறுத்தினர்.

காவல்துறையினர் அச்சுறுத்தல்



இதன்போது நான் வட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைப்பை மேற்கொண்டு இந்த
இரு காவல்துறையினர் அச்சுறுத்தல் தொடர்பாக முறைப்பாடு செய்தேன்.

ஆனால், அங்கிருந்து
எனக்கு சாதகமாக பதில் அளிக்கப்படவில்லை என்னை மிரட்டிய காவல்துறை உத்தியோகத்தர்களின் இலக்கத்தை நான் குறிப்பெடுத்த போது ஒரு காவல்துறை உத்தியோகத்தர் பின்பக்கம் திரும்பி குனிந்து நின்று தனது
ஆசனவாய்ப்பகுதியைக்காட்டி அதற்குள் இலக்கம் இருக்கு எடுக்குமாறு மிகக் கேவலமாக
முறையில் நடந்துகொண்டார்.

வட்டுக்கோட்டை காவல்துறையினர் அடாவடி : ஜனாதிபதிக்கு பறந்த அறிக்கை | People Report Vaddukottai Police To President

என்னை பலமுறை தாக்க முற்பட்டனர், நான் காவல் நிலையம் செல்ல மறுத்த போது காவல்துறை வாகனத்தைக் கொண்டு வருமாறு தொலைபேசியில்
யாருக்கோ கூறினர்.

பத்து நிமிட நேரம் என்னை வீதியில் வைத்து அச்சுறுத்தினர் பின்னர் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடினர்.

ஊடகவியலாளர் 

அவர் எனது விபரத்தைக்
கேட்டறிந்து நான் ஒரு ஊடகவியலாளர் என இவர்களுக்கு கூறினார் இதன் பின்னர் எனது
ஆவணங்களைக் கையளித்துவிட்டு இது உனக்கு இறுதி எச்சரிக்கை என அச்சுறுத்திவிட்டு
சென்றனர்.


நான் வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர். ஊடகவியலாளர், அரச
உத்தியோகத்தர், சமூக செயற்பாட்டாளன். எனக்கே வீதியில் இந்த நிலை என்றால் ஏனைய
சாதாரண அப்பாவிப் பொதுமக்களை காவல்துறை எவ்வாறு நடத்துவார்கள் ? அவர்களின்
பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் ?

வட்டுக்கோட்டை காவல்துறையினர் அடாவடி : ஜனாதிபதிக்கு பறந்த அறிக்கை | People Report Vaddukottai Police To President



வட்டுக்கோட்டை காவல்துறையினர் ஏற்கனவே, சித்தங்கேணியை சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞரை காவல் நிலையத்தில் வைத்து தாக்கி படுகொலை செய்தனர்.

மேலும் பலரை
சித்திரவதைக்கு உட்படுத்தியிருக்கின்றனர், கடந்த வருடம் பொன்னாலையில் அன்றாடச்
சீவியத்திற்கே கஷ்டப்படும் அப்பாவிக் குடும்பம் ஒன்று குழாய்க் கிணறு
வெட்டிய போது அனுமதி எடுக்கவில்லை எனக் காரணம் கூறி அவர்களிடம் இருந்து 8,000
ரூபா பணத்தை இலஞ்சமாக பறித்து சென்றனர்.

இவ்வாறு இவர்களின் அராஜகம் தொடர்ந்து
செல்கின்றனர் எனவே, என்னை அச்சுறுத்திய மேற்படி இரு காவல்துறையினருக்கும் கடுமையான நடவடிக்கை
எடுப்பதுடன், வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்த எமது பிரதேச மக்களைப்
பாதுகாக்குமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

குகைப் பணியின் போது உயிரிழந்த டச்சு பெண் | Makkal Osai

Next Post

கேரளத்தில் பாஜக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சர்

Next Post
கேரளத்தில் பாஜக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சர்

கேரளத்தில் பாஜக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin