வட்டப் பாதை (Circle Line) ரயில் சேவைகளில் குறிப்பிட்ட நாள்களில் மட்டும் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 5 முதல் டிசம்பர் 28 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களில் மட்டும் ரயில் சேவை முன்னதாகவே முடிவடையும் என்றும் பின்னர் தாமதாக சேவை தொடங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அதாவது, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகள் இரவு 11 மணிக்கு முன்னதாகவே முடிவடையும். அதே போல, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணிக்குத் தொடங்கும்.
இதனை நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் SMRT நிறுவனம் ஆகியவை செவ்வாய்க்கிழமை (ஆக.12) கூட்டாக தெரிவித்தன.
வட்டப் பாதையில் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் தொடங்கவுள்ள புதிய சேவைகளுக்காக சுழற்சியை தயார் செய்வதற்காக இந்த மாற்றம் செய்யப்படுவதாக அவை தெரிவித்தன.
இருப்பினும்கூட, அக்டோபர் 3 முதல் 5 வரை, நவம்பர் 28 முதல் 30 வரை மற்றும் டிசம்பர் 5 முதல் 7 வரை வார இறுதி நாட்களில் எந்த மாற்றமும் இருக்காது, அந்த நாட்களில் ரயில் சேவைகள் வழக்கமான நேரங்களில் இயங்கும்.
சேவை மாற்றங்கள் காரணமாக பயணிகள் ஏற்றாற்போல பயண நேரத்தைத் திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சிங்கப்பூர் தேசிய தினத்தில் பிறந்த குழந்தை – மகிழ்ச்சியில் பெற்றோர்!
PHOTO: SMRT/ FB

