வடலூர் வள்ளலார் கோவில் அருகே வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான வழக்கில், தற்போதைய நிலை தொடர வேண்டும் என்றும், புதிய கட்டுமானங்கள் அமைக்கப்படக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இது தொடர்பாக தமிழக அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கை பிப்ரவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு சார்பில் சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதனிடையே, வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

