ராஜஸ்தான் சுரு பகுதியில் 50.5 டிகிரி செல்சியஸ் -வழக்கத்தை விட 7.5 டிகிரி அதிகம்- பதிவாகியுள்ளது.
ஹரியாணாவின் சிர்சா பகுதியில் உச்சபட்ச வெப்பநிலையாக 50.3 டிகிரியும் ஹிசார் பகுதியில் 49.3 டிகிரியும் பதிவாகியுள்ளது.
பஞ்சாப்பில் 49.3 டிகிரி செல்சியஸும் உத்தரப் பிரதேசம் ஜான்சியில் 49 டிகிரி செல்சியஸும் வாரணாசி மற்றும் கான்பூரில் 47.6 டிகிரி செல்சியஸும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்தது. நிவாரி, தாடியா, ரேவா, கஜுராகோ ஆகிய இடங்களில் 48 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பநிலை நிலவியது.

