வடக்கு மாகாண சபைக்குக் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பிரச்சினை இல்லை.
காணி அதிகாரங்கள்
ஆனால் தேர்தலை நடத்தி வடக்கு மாகாண சபைக்குக் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கினால்தான் பிரச்சினை ஏற்படும்.
இலங்கையில் இதுவரை ஆட்சி புரிந்த எந்தவொரு ஜனாதிபதியும் இந்த வேலையைச் (காவல்துறை, காணி அதிகாரம் பகிர்வு) செய்யவில்லை.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இதே அணுகுமுறையைப் பின்பற்றுவார் என நம்புகின்றோம்.
சிலவேளை காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கினால் இந்த நாடு பெடரல் ராஜ்யமாகும்.
அவ்வாறு நடந்தால் இதுவரைகாலமும் பாதுகாத்து வந்த ஒற்றையாட்சி முறைமை இல்லாமல்போகும்.
இது தேசத்துரோக நடவடிக்கையாகவே அமையும் இவ்வாறானதொரு செயலை ஜனாதிபதி செய்வார் என நம்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

