சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் செப்டம்பர் 07 ம் திகதி வரையில் சூரியன் இலங்கையின் பல இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இன்று(28) மதியம் சுமார் 12.11 மணியளவில் கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நாகர்கோவில் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்த வெப்பநிலை
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.
இந்த நிலையில், சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்போது, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும்
75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை
இதேவேளை, ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
அத்தோாடு, மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.
இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! ‘ |

