அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில்
ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராகவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை 17 ஆம் திகதி காலை 8 மணிக்கு கைதடியில் உள்ள வடக்கு
மாகாண சபை அலுவலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகள்
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (14-08-2026)
இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அழைப்பில் வடக்கு மாகாண
தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன்
குறித்த போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

